எம்ஜிஆர், ஜெ. தொடர்ந்து ஸ்டாலின் அமைச்சரவையிலும் இடம்பிடித்த ஈரோடு முத்துசாமி!

எம்ஜிஆர், ஜெ. தொடர்ந்து ஸ்டாலின் அமைச்சரவையிலும் இடம்பிடித்த ஈரோடு முத்துசாமி!

ஸ்டாலின் உட்பட 34 அமைச்சர்களின் பட்டியல் சற்றுமுன் வெளியிடப்பட்டது. இதில் சுகாதாரத் துறை அமைச்சராக மா.சுப்பிரமணியம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது அனைவர் மத்தியிலும் வரவேற்பை பெற்றிருக்கிறது. அதேபோல ஈரோடு முத்துசாமியும் இந்தப் பட்டியலில் கவனம் பெறுகிறார். ஈரோடு மேற்கு தொகுதியில் போட்டியிட்ட அவர், அதிமுக முன்னாள் அமைச்சர் ராமலிங்கத்தை 22 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் தோற்கடித்தார். அவருக்குத் தற்போது வீட்டு வசதித் துறை ஒதுக்கப்பட்டுள்ளது.

எம்ஜிஆர், ஜெ. தொடர்ந்து ஸ்டாலின் அமைச்சரவையிலும் இடம்பிடித்த ஈரோடு முத்துசாமி!

முத்துசாமியைப் பொறுத்தவரை ஈரோட்டில் செல்வாக்கு மிகுந்த நபராகப் பார்க்கப்படுகிறார். அதிமுகவில் இணைந்த அவர் 1977ஆம் ஆண்டு ஈரோடு தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். அதன்பின் 1980, 1984 தேர்தல்களில் வெற்றிபெற்றார். அதற்குப் பிறகு எம்ஜிஆர் அமைச்சரவையில் போக்குவரத்துத் துறை அமைச்சரானார். 1991ஆம் ஆண்டு பவானி தொகுதியில் வென்ற அவர் ஜெயலலிதா அமைச்சரவையில் சுகாதாரத் துறை அமைச்சரானார்.

எம்ஜிஆர், ஜெ. தொடர்ந்து ஸ்டாலின் அமைச்சரவையிலும் இடம்பிடித்த ஈரோடு முத்துசாமி!

2010ஆம் திமுகவில் இணைந்த முத்துசாமிக்கு 2011, 2016 என இரு தேர்தல்களிலுமே தோல்வியே பரிசாக கிடைத்தது. ஆனால் இந்தத் தேர்தலில் ஸ்டாலின் முத்துசாமியை நம்பி சீட் கொடுத்தார். அந்த நம்பிக்கையை வீண் போக செய்யாமல் நல்ல வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற்றார். அதனால் அவருக்கு அமைச்சர் பதவி தேடிச் சென்றிருக்கிறது.