ஈரோடு- நள்ளிரவில் லாரிகளை வழிமறித்த மக்னா யானை – ஓட்டுநர்கள் அச்சம்

ஈரோடு- நள்ளிரவில் லாரிகளை வழிமறித்த மக்னா யானை – ஓட்டுநர்கள் அச்சம்

ஈரோடு

சத்தியமங்கலம் அடுத்த பண்ணாரி சோதனை சாவடியில் இரவுநேரங்களில் கரும்பு தேடி வரும் காட்டுயானைகள் லாரியை மறிக்கும் சம்பவம் ஓட்டுநர்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியை ஒட்டியுள்ள பண்ணாரி சோதனைச் சாவடியில், யானைகள் கரும்பு பாரம் ஏற்றி வரும் லாரிகளை வழிமறித்து கரும்புகளை எடுத்து உண்பது தினசரி வாடிக்கையாக உள்ளது.

ஈரோடு- நள்ளிரவில் லாரிகளை வழிமறித்த மக்னா யானை – ஓட்டுநர்கள் அச்சம்

இந்நிலையில் நேற்று நள்ளிரவு வனப்பகுதியில் இருந்து வெளியேறிய மக்னா யானை ஒன்று, அவ்வழியாக வந்த லாரியை மறித்து கரும்பு உள்ளதா? என சோதனை செய்தது. இதனால், சுமார் ஒரு மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்ட நிலையில், வனத்துறையினர் பட்டாசுகளை வெடித்து யானையை காட்டிற்குள் துரத்தினர். இந்நிலையில், மீண்டும் நள்ளிரவில் இரண்டு முறை

ஈரோடு- நள்ளிரவில் லாரிகளை வழிமறித்த மக்னா யானை – ஓட்டுநர்கள் அச்சம்

காட்டைவிட்டு வெளியே வந்த அந்த யானை லாரிகளை வழிமறித்து லாரியில் உள்ள கயிற்றை அவிழ்க்க முயற்சித்தபோது சிறிது நேரம் தும்பிக்கை மாட்டிக்கொண்டது. பிறகு தானாகவே தும்பிக்கையை எடுத்துக்கொண்டு, அனைத்து லாரிகளையும் ஒன்றன் பின் ஒன்றாக கரும்பு உள்ளதா? என சோதனையில் ஈடுபட்டது. இந்த சம்பவம் லாரி ஓட்டுனர்களை அச்சத்தில் ஆழ்த்தியது.