ஈரோடு- நீர்பிடிப்பு பகுதியில் குறைந்த மழை – பவானிசாகருக்கு நீர்வரத்து சரிவு

ஈரோடு- நீர்பிடிப்பு பகுதியில் குறைந்த மழை – பவானிசாகருக்கு நீர்வரத்து சரிவு

ஈரோடு

நீர்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால், ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து சரிவடைந்தது.

ஈரோடு- நீர்பிடிப்பு பகுதியில் குறைந்த மழை – பவானிசாகருக்கு நீர்வரத்து சரிவு

ஈரோடு, திருப்பூர் மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக பவானிசாகர் அணை விளங்கி வருகிறது. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர்பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப் பகுதி உள்ளது. இந்நிலையில் நீர்பிடிப்பு பகுதிகளில் நேற்று இரவு முதல் மழை பொழிவு

ஈரோடு- நீர்பிடிப்பு பகுதியில் குறைந்த மழை – பவானிசாகருக்கு நீர்வரத்து சரிவு

குறைந்ததால் அணைக்கு நீர் வரத்து குறைந்தது. இன்று காலை 8 மணி நேர நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 100.33 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 1,956 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து கீழ்பவானி பாசனத்திற்காக 2,300 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. மேலும், தடப்பள்ளி அரக்கன்கோட்டை பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு நேற்று இரவு முதல் நிறுத்தப்பட்டுள்ளது. வரத்தை காட்டிலும் திறப்பு அதிகளவில் உள்ளதால் அணையின் நீர்மட்டம் குறைந்து வருகிறது.