“குட்கா பொருட்கள் விற்றால் கிரிமினல் நடவடிக்கை”- ஈரோடு உணவு பாதுகாப்புத்துறை எச்சரிக்கை!

 

“குட்கா பொருட்கள் விற்றால் கிரிமினல் நடவடிக்கை”- ஈரோடு உணவு பாதுகாப்புத்துறை எச்சரிக்கை!

ஈரோடு

ஈரோடு மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட பான்மசாலா குட்கா பொருட்களை விற்கும் வியாபாரிகள் மீது கிரிமினல் நடவடிக்கை உணவு பாதுகாப்பு துறை அலுவலர்கள் எச்சரிக்கை

தமிழகத்தில் பான் மசாலா மற்றும் குட்கா பொருட்களுக்கு தடை விதித்துள்ள போதும், அவை கடைகளில் தாராளமாக கிடைத்து வருகிறது. இதனால், தமிழக அரசு பான் மசாலா, குட்கா இல்லா தமிழகத்தை உருவாக்கும் விதமாக, அனைத்து மாவட்டங்களிலும் உள்ள கடைகளில் குட்கா, பான் மசாலா விற்பனை நடைபெறுகிறதா? என சோதனை செய்து, நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டது. இதன்படி ஈரோடு மாவட்டத்தில் உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாக துறை ஆணையரக உத்தரவு படியும், கலெக்டர் அறிவுரைப்படியும் மாவட்டம் முழுவதும் உள்ள கடைகளில் போலீசார் மற்றும் உணவு பாதுகாப்பு துறை அலுவலர்கள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

“குட்கா பொருட்கள் விற்றால் கிரிமினல் நடவடிக்கை”- ஈரோடு உணவு பாதுகாப்புத்துறை எச்சரிக்கை!

ஈரோடு மாநகராட்சி பகுதியில் உள்ள கருங்கல்பாளையம், கொல்லம்பாளையம், இந்திரா நகர் போன்ற பகுதிகளில் உள்ள அனைத்து மளிகை பொருட்கள் மற்றும் இதர உணவு பொருள் விற்பனை செய்யும் கடைகளில், மாவட்ட உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாக பிரிவு நியமன அலுவலர் தங்க விக்னேஷ் மேற்பார்வையில் அலுவலர்கள் பான் மசாலா மற்றும் குட்கா பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா? என்று ஆய்வு மேற்கொண்டனர். அப்போது ஒரு சில கடைகளில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை அடுத்து, 5 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்த அதிகாரிகள், 5 கடைகளுக்கு தலா ரூ. 5 ஆயிரம் வீதம் ரூ.25 ஆயிரம் உடனடி அபராதம் விதிக்கப்பட்டது.


இது குறித்து உணவு பாதுகாப்புத்துறை அலுவலர்கள் கூறியதாவது:- “ஈரோடு மாவட்டத்தில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்வது கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்ட வியாபாரிகள் மீது கிரிமினல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, அவர்களுக்கு வழங்கப்பட்ட உணவு பாதுகாப்பு உரிமம் ரத்து செய்யப்படும். கடைகளில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்வது குறித்து பொதுமக்களுக்கு தெரிய வந்தால் 94440 42322 என்ற வாட்ஸ் அப் எண்ணிற்கு புகார் தெரிவிக்கலாம்” இவ்வாறு அவர்கள் கூறினர்.