ஈரோடு மீன் சந்தை -இறைச்சிக் கடைகளில் குவிந்த மக்கள்!சமூக இடைவெளி்யை கண்காணிக்க மாநகராட்சி அலுவலர்கள்

 

ஈரோடு மீன் சந்தை -இறைச்சிக் கடைகளில் குவிந்த மக்கள்!சமூக இடைவெளி்யை கண்காணிக்க மாநகராட்சி அலுவலர்கள்

கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் எட்டாம் கட்ட ஊரடங்கு அமலில் இருக்கிறது. மக்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்தும் வகையில் ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமை தளர்வு இல்லாத முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டு வந்தது. அதன்படி கடந்த ஜூலை மாதம் அந்த நான்கு ஞாயிற்றுக்கிழமைகளும் அதைத்தொடர்ந்து ஆகஸ்ட் மாதம் வந்த ஐந்து ஞாயிற்றுக்கிழமையும் தளர்வு இல்லாத முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வந்தது.

ஈரோடு மாவட்டத்திலும் முழு ஊரடங்கு காரணமாக ஞாயிற்றுக்கிழமைகள் அனைத்தும் மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டது. அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு இருந்தன.

ஈரோடு மீன் சந்தை -இறைச்சிக் கடைகளில் குவிந்த மக்கள்!சமூக இடைவெளி்யை கண்காணிக்க மாநகராட்சி அலுவலர்கள்

இந்நிலையில் செப்டம்பர் மாதம் மீண்டும் ஊரடங்கு நீக்கப்பட்டாலும் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. அதன்படி ஞாயிற்றுக்கிழமைகளில் கடைப்பிடிக்கப்பட்டு வந்த முழு ஊரடங்கு ரத்து செய்யப்பட்டது.அதன்படி இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் ஈரோட்டில் ஸ்டோனி பிரிட்ஜில் உள்ள மீன் மார்க்கெட்டில் மக்கள் ஆர்வத்துடன் மீன் வாங்கி சென்றனர். இங்கு ஆற்று மீன்கள், கடல் மீன்கள் அதிகளவில் விற்பனைக்கு கொண்டு வரப்படும். பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கிச் சென்றனர்.

மீன் வாங்க வரும் மக்கள் கண்டிப்பாக முகக்கவசம் அணிய அறிவுறுத்தப்படுகின்றனர். மேலும் மார்க்கெடுக்குள் நுழையும்போது கிருமி நாசினிக் மூலம் கைகள் சுத்தப் படுத்தப் பட்டன. குழந்தைகள், முதியவர்கள் அனுமதிக்கப்படவில்லை. மக்கள் முறையாக சமூக இடைவெளியை கடைபிடிக்கிறார்களா என்பதை கண்காணிக்க மாநகராட்சி சார்பில் அலுவலர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர். இதைப்போல் இறைச்சிக் கடைகளிலும் இன்று மக்கள் கூட்டம் வழக்கத்தை விட அதிகமாக இருந்தது. அங்கு சமூக இடைவெளியை கடைபிடிக்கும் வகையில் வட்டங்கள் போடப்பட்டு இருந்தன. அந்த வட்டங்களில் மக்கள் வரிசையாக நின்று இறைச்சிகளை வாங்கி சென்றனர்.

ஈரோடு மீன் சந்தை -இறைச்சிக் கடைகளில் குவிந்த மக்கள்!சமூக இடைவெளி்யை கண்காணிக்க மாநகராட்சி அலுவலர்கள்

இதேபோன்று ஈரோடு வ. உ. சி பூங்கா பகுதியில் செயல்பட்டுவரும் நேதாஜி காய்கறி மார்க்கெட்டில் இன்று வழக்கத்தை விட கூட்டம் அதிகமாக இருந்தது. ஞாயிற்றுக்கிழமை என்பதால் அரசு அலுவலங்களில் வேலை பார்க்கும் ஊழியர்கள் விடுமுறையில் இருப்பார்கள் . இதனால் அவர்கள் இன்று ஒருவாரத்துக்கு தேவையான காய்கறிகளை வாங்கிச் சென்றனர். இதைப்போல் சின்ன மார்க்கெட் உழவர் சந்தை போன்ற இடங்களிலும் மக்கள் கூட்டம் அதிகமாகவே இருந்தது. பெரும்பாலான மக்கள் முக கவசம் அணிந்து வந்தாலும் ஒரு சில மக்கள் முக கவசம் அணியாமல் வந்ததைக் காண முடிந்தது.