சலூனில் தற்காலிக விலையேற்றம்.. ஹேர் கட் / சேவிங் செய்ய கட்டணம் எவ்வளவு தெரியுமா?

சலூனில் தற்காலிக விலையேற்றம்.. ஹேர் கட் / சேவிங் செய்ய கட்டணம் எவ்வளவு தெரியுமா?

தமிழகத்தில் கொரோனா வைரஸ் அதிவேகமாக பரவி வரும் நிலையிலும், நான்காம் கட்ட ஊரடங்கு போடப்பட்ட போது 34 வகையான கடைகளுக்கு அரசு அனுமதி அளித்தது.

சலூனில் தற்காலிக விலையேற்றம்.. ஹேர் கட் / சேவிங் செய்ய கட்டணம் எவ்வளவு தெரியுமா?

அதன்படி நகர்புறங்களில் நேற்று முதல் சலூன் மற்றும் பியூட்டி பார்லர்களை திறக்கப்பட்டுள்ளன. சென்னை பெருநகர காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளை தவிர பிற அனைத்து மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகளில் சலூன் மற்றும் பியூட்டி பார்லர்கள் காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை இயங்க அனுமதி அளிக்கப்படுவதாகவும், தடை செய்யப்பட்ட பகுதிகளில் இருந்து வரும் தொழிலாளர்களை பணிக்கு அமர்த்த கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், குளிர்சாதன வசதிகளுடன் இயங்கும் சலூன் கடைகளை ஏ.சி பயன்படுத்தக் கூடாது என்றும் சமூக இடைவெளி மற்றும் கிருமி நாசினி தெளிப்பதை கட்டாயமாக பின்பற்ற வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது.

சலூனில் தற்காலிக விலையேற்றம்.. ஹேர் கட் / சேவிங் செய்ய கட்டணம் எவ்வளவு தெரியுமா?

இந்நிலையில் ஈரோடு மாவட்டம் சவர தொழிலாளர்கள் சங்கம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ஹேர் கட் -200 ரூபாய் என்றும் சிறுவருக்கு 150 ரூபாய் என்றும் சேவிங் -100 ரூபாய் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இது தற்காலிக விலையேற்றம் என்று குறிப்பிட்டுள்ளது.