ஈரோடு சுற்றுவட்டார பகுதிகளில் சாரல் மழை

 

ஈரோடு சுற்றுவட்டார பகுதிகளில் சாரல் மழை

ஈரோடு

நிவர் புயல் காரணமாக ஈரோடு மாவட்ட சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக சாரல் மழை பெய்தது. ஈரோடு, பெருந்துறை, கோபி, பவானி உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று இரவு முதல் பெய்து வரும் சாரல் மழையால் அப்பகுதியில் குளிர்ச்சியான சூழல் நிலவியது. ஒரு சில இடங்களில் கனமழை பெய்ததால், பள்ளமான இடங்களில் மழை நீர் தேங்கியது. மாவட்ட நிர்வாகம் சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 50 ஆயிரம் பேர் தங்கும் வகையில் முகாம்கள் அமைக்கப்பட்டிருந்தன. இந்த நிலையில், காலை 8 மணி நிலவரப்படி அதிகபட்சமாக பவானியில் 8.6 சென்டி மீட்டரும், கோபியில் 7.6 சென்டி மீட்டரும், ஈரோடு மற்றும் பெருந்துறையில் தலா 6 சென்டி மீட்டரும் மழை பதிவானது.

ஈரோடு சுற்றுவட்டார பகுதிகளில் சாரல் மழை

மாவட்டத்தின் முக்கிய நீர் நிலையான பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 95.41 ஆகவும் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 913 கனஅடியாகவும் இருந்தது. இதனிடையே மழை காரணமாக ஈரோடு மாவட்டத்தில் எந்த வித பாதிப்பும் ஏற்படவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.