ஈரோட்டில் பொதுமுடக்கத்தால் வெறிச்சோடிய சாலைகள்… தடையை மீறிய வாகனங்கள் பறிமுதல்!

ஈரோட்டில் பொதுமுடக்கத்தால்  வெறிச்சோடிய சாலைகள்… தடையை மீறிய வாகனங்கள் பறிமுதல்!

ஈரோடு

ஈரோடு மாவட்டத்தில் முழு பொதுமுடக்கம் அமலானதை தொடர்ந்து, நகரின் முக்கிய சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன.

ஈரோடு மாவட்டத்தில் இன்று முழு ஊரடங்கு அமலானதை அடுத்து, வாகன போக்குவரத்து ரத்தானதுடன், கடைகள் முழுமையாக அடைக்கப்பட்டன. இதனால், மக்கள் கூட்டம் நிறைந்த ஈரோடு பேருந்து நிலையம், பன்னீர்செல்வம் பார்க், மணிக்கூண்டு, காளைமாடு சிலை, ஸ்வஸ்திக் கார்னர், மேட்டூர் ரோடு உள்ளிட்ட நகரின் முக்கிய பகுதிகள் மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டது.

ஈரோட்டில் பொதுமுடக்கத்தால்  வெறிச்சோடிய சாலைகள்… தடையை மீறிய வாகனங்கள் பறிமுதல்!

ஈரோடு மாவட்டத்தில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசைத்தறிகள் அடைக்கப்பட்ட நிலையில், ஜவுளி நிறுவனங்கள், வணிக வளாகங்கள், நேதாஜி பெரிய மார்க்கெட், உழவர் சந்தை, இறைச்சிக் கடைகள் உள்ளிட்டவை அடைக்கப்பட்டன. அதே நேரத்தில் பால் கடைகள், மருந்து கடைகள், மருத்துவமனைகள், பெட்ரோல் பங்க்குகள் வழக்கம் போல் செயல்பட்டன.

ஈரோட்டில் பொதுமுடக்கத்தால்  வெறிச்சோடிய சாலைகள்… தடையை மீறிய வாகனங்கள் பறிமுதல்!

அதேபோல், ரயில் போக்குவரத்து இயங்கியதால், தங்களது சொந்த மாநிலங்களுக்கு செல்வதற்காக ஈரோடு ரயில் நிலையத்திற்கு நேற்றிரவு முதலே ஆயிரக்கணக்கான வடமாநில தொழிலாளர்கள் குடும்பத்துடன் வந்து இருந்தனர். தொடர்ந்து, இன்று காலை இயக்கப்பட்ட சிறப்பு ரெயில்களில் அவர்கள் தங்களுடைய சொந்த ஊருக்கு கிளம்பி சென்றனர்.

ஈரோட்டில் பொதுமுடக்கத்தால்  வெறிச்சோடிய சாலைகள்… தடையை மீறிய வாகனங்கள் பறிமுதல்!

முழு ஊரடங்கையொட்டி, மாவட்டத்தில் தடையை மீறி வெளியே சுற்றுபவர்களை கண்காணிக்க 700-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர். அப்போது, அத்தியாவசிய தேவையின்றி வாகனங்களில் சுற்றித்திரிந்த நபர்பளை பிடித்து அபராதம் விதித்துடன், சிலரது வானங்களையும் பறிமுதல் செய்தனர்.