ஈரோடு மாவட்டத்தில் பொதுமுடக்கம் அமல்- பாதுகாப்பு பணியில் 700 போலீசார்!

 

ஈரோடு மாவட்டத்தில் பொதுமுடக்கம் அமல்- பாதுகாப்பு பணியில் 700 போலீசார்!

ஈரோடு

ஈரோடு மாவட்டத்தில் பொதுமுடக்கம் அமலுக்கு வந்த நிலையில், மாவட்டம் முழுவதும் 700-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

தமிழகத்தில் கொரோனா 2-ம் அலை பரவலையடுத்து, இன்று முதல் வரும் 24 ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதன்படி, ஈரோடு மாவட்டத்தில் பால், மளிகை, மெடிக்கல்கள் வழக்கம் போல் செயல்பட்டன. அதேபோல், இறைச்சி கடைகள் மதியம் 12 மணி வரை செயல்பட்டது. தனியார் உணவகங்களில் குறிப்பிட்ட நேரங்களில் பார்சல் மட்டும் வழங்கப்படும் நிலையில, பொதுமுடக்கம் காரணமாக மாநகரில் உள்ள 13 அம்மா உணகங்களில் கூடுதலாக உணவு தயாரிக்கப்பட்டு பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.

ஈரோடு மாவட்டத்தில் பொதுமுடக்கம் அமல்- பாதுகாப்பு பணியில் 700 போலீசார்!

பொதுமுடக்கத்தையொட்டி, பேருந்துகள், டாக்ஸி, ஆட்டோக்கள் ஓடாததால் ஈரோடு பேருந்த நிலையமும், ஜவுளி கடைகள் மூடப்பட்டதால், பன்னீர்செல்வம் பார்க், ஈஸ்வரன் கோயில் வீதி, ஆர்.கே.வி.ரோடு மணிக்கூண்டு உள்ளிட்ட பரபரப்பான பகுதிகளும் வெறிச்சோடி காணப்பட்டன. எனினும் வங்கிகள், அரசு – தனியார் நிறுவனங்கள் 50 சதவீத ஊழியர்களுடன் செயல்பட்டது. அதேபோல், தடுப்பூசிகளை வழக்கம்போல் போட்டுக் கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

ஈரோடு நேதாஜி பெரிய மார்க்கெட்டில் பொதுமுடக்கம் முடியும் வரை காலை 7 மணி வரை மட்டுமே சில்லறை விற்பனை நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. அதேபோல், உழவர் சந்தையும் வழக்கம்போல் செயல்பட்டது. இதனால், மக்கள் காலை முதலே ஆர்வத்துடன் காய்கறிகளை வாங்கி சென்றனர். இதனிடையே, இறைச்சி கடைகளில் கூட்டம் கூடுவதை தவிர்க்க வீடுகளுக்கு சென்று இறைச்சி வழங்க மாநகராட்சி ஆணையர் தெரிவித்து உள்ளார்.

ஈரோடு மாவட்டத்தில் பொதுமுடக்கம் அமல்- பாதுகாப்பு பணியில் 700 போலீசார்!

ஊரடங்கை மீறி பொதுமக்கள் வெளியே சுற்றுவதை தவிர்க்கும் விதமாக, மாவட்டம் முழுவதும் 42 இடங்களில் சோதனை சாவடிகள் அமைத்து 2 ஏடிஎஸ்பி-க்கள், 9 டிஎஸ்பிக்கள் தலைமையில் 700-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். மேலும், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் தடுப்புகளை ஏற்படுத்தி, தேவையின்றி வெளியே சுற்றும் நபர்களை பிடித்து எச்சரித்து அனுப்பி வைத்தனர்.