ஈரோட்டில் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி, திமுகவினர் உற்சாக கொண்டாட்டம்!

 

ஈரோட்டில் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி, திமுகவினர்  உற்சாக கொண்டாட்டம்!

ஈரோடு

தமிழக முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பதவி ஏற்றதையொடடி, ஈரோட்டில் அந்த கட்சியினர் பட்டாசு வெடித்தும், இனிப்புகளை வழங்கியும் உற்சாகமாக கொண்டாடினர்.

தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணி பெறும்பான்மையான இடங்களில் வென்றதை அடுத்து, அந்த கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று தமிழக முதலமைச்சராக பொறுப்பேற்று கொண்டார். அவருடன் 34 அமைச்சர்களும் பொறுப்பேற்ற நிலையில், இதனை தமிழகம் முழுவதுமுள்ள திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சியினர் கொண்டாடி வருகின்றனர்.

ஈரோட்டில் ஸ்டாலின் முதல்வரானதை ஒட்டியும், ஈரோடு தெற்கு மாவட்ட செயலாளர் முத்துச்சாமி, அமைச்சராக பொறுப்பேற்றுள்ளதையும் அந்த கட்சியினர் பட்டாசுகளை வெடித்தும், இனிப்புகளை வழங்கியும் தங்களுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

ஈரோட்டில் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி, திமுகவினர்  உற்சாக கொண்டாட்டம்!

இதனையொட்டி, ஈரோடு வீரப்பன்சத்திரம் பகுதியில் நடந்த கொண்டாட்ட நிகழ்ச்சியில், அரசின் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன்,
மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் உருவ படத்திற்கு, பகுதி செயலாளர் வி.சி.நடராஜன் தலைமையில் அக்கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். தொடர்ந்து, பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கியும், பட்டாசுகளை வெடித்தும் உற்சாகமாக கொண்டாடினர்.

இதேபோல, ஈரோடு தெற்கு மாவட்ட வழக்கறிஞர் அணி சார்பில், மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முன்பு, துணை செயலாளர் சதிஷ்குமார் தலைமையில் அப்பகுதி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கியும், கொரோனா தடுப்பு நடவடிக்கையாக முக கவசங்களையும் வழங்கினர். அப்போது, தமிழக முதல்வராக பொறுப்பேற்றுள்ள மு.க.ஸ்டாலினை வாழ்த்தி அவர்கள் கோஷங்களை எழுப்பினர் .