ஈரோட்டில் ரயில் விபத்து பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி!

 

ஈரோட்டில் ரயில் விபத்து  பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி!

ஈரோடு

ஈரோட்டில் ரயில் விபத்தில் சிக்கிய பயணிகளை மீட்பது குறித்து, விழிப்புணர்வு பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.

இதனையொட்டி, ஈரோடு ரயில் நிலையத்தில் உள்ள பணிமனையில் தண்டவாளத்தில் 2 ரயில் பெட்டிகளை கவிழ்த்து வைத்து, அதில் சிலர் சிக்கி கொள்வது போன்றும், அவர்களை மீட்புக் குழுவினர் நவீன எந்திரங்கள் உதவியுடன் உயிரோடு மீட்பது போன்றும் ஒத்திகை நடைபெற்றது.

அதன்படி கவிழ்ந்த ரயில் பெட்டிகளின் இடிபாடுகளுக்குள் சிக்கி பயணிகள் மரண கோஷம் எழுப்பினர். அப்போது, அரக்கோணத்தில் இருந்து வந்த தேசிய பேரிடர் மீட்பு குழுவினர், நவீன எந்திரங்கள் உதவியுடன் ரயில் பெட்டியை துளையிட்டும், ஜன்னல் கம்பிகளை அழுத்தும் படுகாயமடைந்து உயிருக்குப் போராடும் பயணிகளை மீட்டனர்.

ஈரோட்டில் ரயில் விபத்து  பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி!

பின்னர் அவர்களை அங்கு தயாராக இருந்த மருத்துவ குழுவிடம் அழைத்துச் சென்று, முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, பின்னர் மேல் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்வது போன்று மீட்பு குழுவினர் தத்ரூபமாக செய்து கட்டி அசத்தினர்.

இந்த பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சியில் சேலம் கோட்ட உதவி மேலாளர் அண்ணாதுரை, ஈரோடு ரயில்வே காவல் ஆய்வாளர் செந்தில்குமார், உதவி ஆய்வாளர் ராஜேந்திரன் உள்பட ஏராளமான போலீசார், ரயில்வே துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.