ஈரோடு நேதாஜி மார்க்கெட்டில் முக கவசம் அணியாதவர்களுக்கு 2-வது நாளாக அபராதம் விதிப்பு!

 

ஈரோடு நேதாஜி மார்க்கெட்டில் முக கவசம் அணியாதவர்களுக்கு 2-வது நாளாக அபராதம் விதிப்பு!

ஈரோடு

ஈரோடு நேதாஜி பெரிய மார்க்கெட்டில் நேற்று 2-வது நாளாக ஆய்வு நடத்திய மாநகராட்சி அதிகாரிகள், முக கவசம் அணியாமல் இருந்த வியாபாரிகளுக்கு அபாரதம் விதித்தனர்.

ஈரோட்டில் கொரோனா பரவல் காரணமாக கடந்தாண்டு நேதாஜி பெரிய மார்க்கெட் இடமாற்றம் செய்யப்பட்டு, ஈரோடு வ.உ.சி பூங்கா பகுதியில் தற்காலிகமாக செயல்பட்டு வருகிறது. இங்கு 700-க்கும் மேற்பட்ட காய்கறி கடைகளும், 50-க்கும் மேற்பட்ட பழக்கடைகளும் செயல்பட்டு வருகின்றன. இரவு நேரங்களில் மொத்த வியாபாரமும், காலை நேரங்களில் சில்லறை வியாபாரம் நடைபெறுகிறது.

இதனிடையே, கொரோனா பரவல் காரணமாக, மக்கள் அதிகளவு கூடுவதை தவிர்க்கும் விதமாக, பெரிய மார்க்கெட்டில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதன்படி மார்க்கெட்டில், சமூக இடைவெளியை கடைபிடிக்கும் வகையில், நுழைவு வாயிலில் தடுப்பு அமைத்து ஒருவர் பின் ஒருவராக அனுமதிக்கப் படுகின்றனர். மேலும், பொதுமக்கள், வியாபாரிகளின் உடல் வெப்பநிலை பரிசோதிக்ப்பட்டு, கிருமி நாசினி தெளிக்கப்பட்டு உள்ளே அனுமதித்தனர்.

ஈரோடு நேதாஜி மார்க்கெட்டில் முக கவசம் அணியாதவர்களுக்கு 2-வது நாளாக அபராதம் விதிப்பு!

மேலும், விதிமுறைகள் முறையாக கடைபிடிக்கப்படுகிறதா? என அவ்வபோது மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். அதன்படி, நேற்று முன்தினம் திடீர் ஆய்வு மேற்கொண்ட மாநகராட்சி ஆணையர் இளங்கோவன், விதிகளை பின்பற்றாதவர்களுக்கு அபராதம் விதித்து உத்தரவிட்டார்.

அதைத் தொடர்ந்து, நேற்று 2-வது நாளாக நேதாஜி காய்கறி மார்க்கெட்டில் துப்புரவு ஆய்வாளர் கண்ணன், உதவி ஆய்வாளர் சரவணன் தலைமையில், வீரப்பன்சத்திரம் போலீசார் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது, முக கவசம் அணியாமல் வந்த வியாபாரிகள் மற்றும் பொதுமக்களுக்கு அபராதம் விதித்தனர். மேலும், விதிகளை மீறி மார்க்கெட் வெளியே கடை அமைத்த வியாபாரிகளுக்கும் அபராதம் விதிக்கப்பட்டது.