“பள்ளிகள் திறப்பு குறித்து முதலமைச்சருடன் ஆலோசனை” – செங்கோட்டையன்

“பள்ளிகள் திறப்பு குறித்து முதலமைச்சருடன் ஆலோசனை” – செங்கோட்டையன்

ஈரோடு

தமிழகத்தில் பள்ளிகளை திறப்பது குறித்து, முதலமைச்சருடன் கலந்தாலோசிக்கப்பட்டு வருவதாக, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். கோபிசெட்டிபாளையம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் நலத்திட்ட பணிகளை தொடங்கிவைத்த பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இதனை தெரிவித்தார்.

“பள்ளிகள் திறப்பு குறித்து முதலமைச்சருடன் ஆலோசனை” – செங்கோட்டையன்

மேலும், முதலமைச்சரின் முயற்சி காரணமாக மருத்துவ படிப்பில் 7.5 சதவீதம் உள்ஒதுக்கீடு என்ற அடிப்படையில், அரசுப்பள்ளியில் பயிலும் 303 மாணவர்கள் மருத்துவ கல்லூரிக்கு செல்ல உள்ளதாகவும், முதலமைச்சரின் இந்த நடவடிக்கையானது, ஆளுநரே பாராட்டும் வகையில் அமைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

“பள்ளிகள் திறப்பு குறித்து முதலமைச்சருடன் ஆலோசனை” – செங்கோட்டையன்

நீட் பயிற்சிக்கு 9 ஆயிரத்து 842 மாணவர்கள் விண்ணப்பித்திருந்த நிலையில், தற்போது கூடுதலாக 20 ஆயிரம் மாணவர்கள் ஒரே நாளில் விண்ணப்பித்துள்ளதாக தெரிவித்த அவர், நீட் தேர்விற்கான பயிற்சி ஆன்லைன் பதிவுகள் முடிவடைந்ததும், ஓரிரு நாட்களில் பயிற்சி அளிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும், நடப்பாண்டிலேயே முழுமையாக பயிற்சி அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

“பள்ளிகள் திறப்பு குறித்து முதலமைச்சருடன் ஆலோசனை” – செங்கோட்டையன்

மேலும், அரசு பள்ளியில் மாணவர்களை சேர்க்க பொதுமக்கள் ஆர்வம் காட்டி வருவதாக தெரிவித்த அமைச்சர் செங்கோட்டையன், நடப்பாண்டில் 5.25 லட்சம் மாணவர்கள் தனியார் பள்ளிலிருந்து அரசு பள்ளியில் சேர்ந்துள்ளதாகவும் தெரிவித்தார்.