வாக்கு எண்ணும் மையம் – ஆட்சியர் கதிரவன் நேரில் ஆய்வு

 

வாக்கு எண்ணும் மையம் – ஆட்சியர் கதிரவன் நேரில் ஆய்வு

ஈரோடு

ஈரோட்டில் சட்டமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணும் மையம் அமைப்பது குறித்து, தனியார் கல்லூரியில் மாவட்ட ஆட்சியர் கதிரவன் ஆய்வு மேற்கொண்டார்.

வாக்கு எண்ணும் மையம் – ஆட்சியர் கதிரவன் நேரில் ஆய்வு


ஈரோடு மாவட்டத்தில், வரும் 2021 ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலுக்கான முன்னேற்பாடுகளில் மாவட்ட தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான கதிரவன் தீவிரம் காட்டி வருகிறார். இதனையொட்டி, மாவட்டத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டு, வாக்காளர் பெயர் சேர்ப்பு, திருத்தம் செய்வதற்கான சிறப்பு முகாம்களும் நடைபெற்று வருகிறது. இதன் தொடர்ச்சியாக, இன்று சட்டமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை மையம் அமைப்பது குறித்து, சென்னிமலை சாலையில் உள்ள தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

வாக்கு எண்ணும் மையம் – ஆட்சியர் கதிரவன் நேரில் ஆய்வு

இந்த ஆய்வின்போது, வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு தேவையான கட்டமைப்பு வசதிகள் குறித்தும், வாக்குப்பதிவு சீட்டு பெட்டிகளை இருப்பறையில் வைக்கும் பொருட்டு, அறை வசதி ஆகியவை குறித்து ஆய்வுமேற்கொண்டார். மேலும், குடிநீர், கழிப்பறை, மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்தும் ஆட்சியர் கதிரவன் கேட்டறிந்தார். இந்த ஆய்வின்போது, மாவட்ட வருவாய் அலுவலர் கவிதா, மாவட்ட எஸ்.பி .தங்கதுரை, மாநகராட்சி ஆணையர்
இளங்கோவன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.