“ஈரோடு மாவட்டத்திற்கு கூடுதலாக 3 டன் ஆக்சிஜன் பெற நடவடிக்கை”- ஆட்சியர் கதிரவன் தகவல்

 

“ஈரோடு மாவட்டத்திற்கு கூடுதலாக 3 டன் ஆக்சிஜன் பெற நடவடிக்கை”- ஆட்சியர் கதிரவன் தகவல்

ஈரோடு

ஈரோடு மாவட்டத்திற்கு கூடுதலாக 3 டன் ஆக்சிஜன் பெற நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் கதிரவன் தெரிவித்து உள்ளார்.

ஈரோடு மாவட்டத்தில் ஆக்சிஜன் தட்டுப்பாடு இன்றி, தேவையானவர்களுக்கு கிடைக்க செய்வதற்கான முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம் நேற்று ஆட்சியர் கதிரவன் தலைமையில் நடந்தது. இதில் பேசிய ஆட்சியர் கதிரவன், மாவட்டத்துக்கு தேவையான ஆக்சிஜன் இருப்பில் இருக்கும் படி பார்த்துக் கொள்ளவும், எந்த வகையிலும் தட்டுப்பாடு ஏற்படாத வகையில், அரசு, தனியார் மருத்துவமனைகளில் உள்ள சேமிப்பு கிடங்குகளில். திரவ ஆக்சிஜனை சேமித்து வைக்க வேண்டும் என்றும் கூறினார்.

இதேபோல், தற்போது மாவட்டத்தில் உள்ள எத்தனை தனியார் மருத்துவமனைகளில் ஆக்சிஜன் இருப்பில் உள்ளது என்பதை கணக்கெடுத்து, தீயணைப்புத் துறையினர் அங்கு தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென அறிவுறுத்தினார்.

“ஈரோடு மாவட்டத்திற்கு கூடுதலாக 3 டன் ஆக்சிஜன் பெற நடவடிக்கை”- ஆட்சியர் கதிரவன் தகவல்

மேலும், ஈரோடு மாவட்டத்துக்கு கூடுதலாக 3 டன் திரவ ஆக்சிஜன் கேட்டுப் பெற நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஆட்சியர் கதிரவன் கூறினார்.கூட்டத்தில் பேசிய தனியார் மருத்துவமனை நிர்வாகிகள், ஈரோடு மாவட்ட தனியார் மருத்துவமனைகளில், கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டு வருவதாக தெரிவித்தனர்.

எனவே, பெருந்துறை சிப்காட்டில் உள்ள நிறுவனத்தில் நாள் ஒன்றுக்கு உற்பத்தியாகும் 37 டன் திரவ ஆக்சிஜனில், அரசுக்கு வழங்கியதுபோக மீதமுள்ள 5 டன் திரவ ஆக்சிஜன் ஈரோட்டில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளனர்.