தீவிர சிகிச்சை பிரிவில், கவச உடையில் நோயாளிகளை சந்தித்த ஈரோடு ஆட்சியர்!

 

தீவிர சிகிச்சை பிரிவில், கவச உடையில் நோயாளிகளை சந்தித்த ஈரோடு ஆட்சியர்!

ஈரோடு

பெருந்துறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உள்ள கொரோனா நோயாளிகளிடம் கவச உடை அணிந்து சென்று ஆட்சியர் கிருஷ்ணன் உண்ணி குறைகளை கேட்டறிந்தார்.

ஈரோடு மாவட்ட ஆட்சியராக புதிதாக பொறுப்பேற்றுள்ள கிருஷ்ணனுண்ணி, நேற்று முழுமையாக கொரோனா சிகிச்சை மையமாக செயல்படும் பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து அவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறை, உணவு உள்ளிட்டவை குறித்து ஆட்சியர் கேட்டறிந்தார். மேலும், மருத்துவமனையில் உள்ள சளி மாதிரிகள் பரிசோதனை ஆய்வகத்தையும் அவர் பார்வையிட்டார்.

தீவிர சிகிச்சை பிரிவில், கவச உடையில் நோயாளிகளை சந்தித்த ஈரோடு ஆட்சியர்!

தொடர்ந்து, மருத்துவக்கல்லூரி வளாகத்தில் ரோட்டரி சங்கம் சார்பில் புதிதாக கட்டப்பட்டு வரும் 400 ஆக்சிஜன் படுக்கைகளுடன் கூடிய கட்டிட பணிகளையும், மருத்துவ பயன்பாட்டில் உள்ள ஆக்சிஜன் கலனையும் ஆட்சியர் பார்வையிட்டார். தொடர்ந்து, கவச உடை அணிந்த அட்சியர் கிருஷ்ணன் உண்ணி, தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளவர்களை சந்தித்து அவர்களுக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை குறித்து கேட்டறிந்தார்.

ஆய்வின்போது, சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு தேவையான பொருட்களை, அவர்களின் உறவினர்கள் நேரடியாக கொண்டுசெல்வதை தடுக்க வேண்டுமென அறிவுறுத்திய ஆட்சியர், கொரோனா தகவல் மையம் அல்லது மருத்துவர்கள், செவிலியர்கள் மூலமாக அவற்றை வழங்க வேண்டும் என உத்தரவிட்டார்.