சின்ன மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம் – திரளான பக்தர்கள் வழிபாடு

 

சின்ன மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம் – திரளான பக்தர்கள் வழிபாடு

ஈரோடு

ஈரோடு மாவட்டம் கருங்கல்பாளையம் சின்ன மாரியம்மன் கோயிலில் இன்று கும்பாபிஷேக விழா விமரிசையாக நடைபெற்றது. 12 ஆண்டுகளுக்கு பின் நடைபெற்ற இந்த கும்பாபிஷேக கடந்த 3 நாட்களுக்கு முன்பு தொடங்கி, யாக கால பூஜைகள் நடைபெற்று வந்தன. இன்று யாக சாலைகள் வைக்கப்பட்டு, தீர்த்த கலசங்கள் ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்டு, கோவிலை சுற்றி வந்தது.

சின்ன மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம் – திரளான பக்தர்கள் வழிபாடு

அதைத் தொடர்ந்து ராஜகோபுரம், மூலவர் கோபுரம் ஆகியவற்றுக்கு, கோயில் அர்ச்சகர்கள் கும்பாபிஷேகம் செய்து புனித நீரை ஊற்றினர்.
இந்த நிகழ்ச்சியில் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கே.வி. ராமலிங்கம், கே.எஸ்.தென்னரசு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்துகொண்டு அம்மனை தரிசித்து சென்றனர். இதைத் தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.