ஈரோடு: பெரிய வெங்காயம் கிலோ ரூ.125 விற்பனை; பொதுமக்கள் அதிர்ச்சி

 

ஈரோடு: பெரிய வெங்காயம் கிலோ ரூ.125 விற்பனை; பொதுமக்கள் அதிர்ச்சி

கர்நாடக மாநிலத்தில் தற்போது கனத்த மழை பெய்து வருவதால் வெங்காயத்தின் வரத்து குறைந்துள்ளது. இதன் எதிரொலியாக சின்ன வெங்காயம் பெரிய வெங்காயம் விலை உயர்ந்துள்ளது.

ஈரோடு: பெரிய வெங்காயம் கிலோ ரூ.125 விற்பனை; பொதுமக்கள் அதிர்ச்சி

ஈரோடு வ. வு. சி பூங்கா பகுதியில் செயல்பட்டுவரும் நேதாஜி பெரிய மார்க்கெட்டில் சின்ன வெங்காயத்தின் விலை கிலோ 120 ரூபாய்க்கு விற்பனையாகி னது. ஆனால் இப்போது சின்ன வெங்காயத்தின் விலையை தொடர்ந்து பெரிய வெங்காயத்தின் விலையும் இன்று அதிரடியாக உயர்ந்துள்ளது. கர்நாடகம் மாநிலம் இந்தூர் மாவட்டத்தில் இருந்து தினமும் ஈரோடு பெரிய மார்க்கெட்டுக்கு 10 லாரிகளில் பெரிய வெங்காயம் வரத்தாகி

ஈரோடு: பெரிய வெங்காயம் கிலோ ரூ.125 விற்பனை; பொதுமக்கள் அதிர்ச்சி

வந்தது. தற்போது அங்கு பலத்த மழை பெய்து வருவதால் இரண்டு லாரிகளில் மட்டுமே பெரிய வெங்காயம் வந்தது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு வரை பெரிய வெங்காயத்தின் விலை கிலோ ரூ. 70 முதல் ரூ. 80 வரை விற்பனையாகி வந்தது. இந்நிலையில் இன்று பெரிய வெங்காயம் ஒரு கிலோ ரூ.105 முதல் 125 வரை விற்பனையானது.

பெரிய வெங்காயம் சமையலில் முக்கியமாக இடம் பிடிக்கக் கூடிய தாகும். இதனால் மொத்த வியாபாரிகள் ,சில்லரை வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.