ஈரோடு, திண்டுக்கல் மாவட்ட தனியார் மருத்துவமனைகள் ஒருநாள் வேலை நிறுத்தம்

 

ஈரோடு, திண்டுக்கல் மாவட்ட தனியார் மருத்துவமனைகள் ஒருநாள் வேலை நிறுத்தம்

ஆயுஷ் மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்யும் மத்திய அரசின் உத்தரவுக்கு எதிராக ஈரோடு மற்றும் திண்டுக்கல் மாவட்டத்தில் தனியார் மருத்துவமனைகள் ஒருநாள் அடையாள வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்

ஈரோடு, திண்டுக்கல் மாவட்ட தனியார் மருத்துவமனைகள் ஒருநாள் வேலை நிறுத்தம்

திண்டுக்கல் மாவட்டத்தில் இந்திய மருத்துவ கழகம் சார்பில் நடைபெற்ற வேலைநிறுத்த போராட்டத்தில 700-க்கும் மேற்பட்ட தனியார் மருத்துவமனைகள் மூடப்பட்டன. அவசர சிகிச்சை பிரிவு மற்றும் அறுவை சிகிச்சை பிரிவு மட்டும் செயல்பட்டது. இதேபோல், திண்டுக்கல் அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் மருத்துவர்களும் கலப்பு மருத்துவ கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, கருப்பு பேட்ஜ் அணிந்து பணிபுரிந்து தங்களது எதிர்ப்பை பதிவு செய்தனர்.

ஈரோடு, திண்டுக்கல் மாவட்ட தனியார் மருத்துவமனைகள் ஒருநாள் வேலை நிறுத்தம்

ஈரோடு மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஆயிரத்து 500 தனியார் மருத்துவமனைகள் கலந்துகொண்டதாக ஐஎம்ஏ அறிவித்துள்ளது. இதுகுறித்து பேசிய இந்திய மருத்துவ சங்கத்தின் தமிழக தலைவர் மருத்துவர் ராஜா, ஈரோடு மாவட்டத்தில் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை தனியார் மருத்துவமனைகள் மற்றும் கிளினிக்களில் பணியாற்றி வரும் 3 ஆயிரம் மருத்துவர்கள் பங்கேற்றதாக தெரிவித்தார். மேலும், அவசர சிகிச்சை மற்றும் உள் நோயாளிகளுக்கு எவ்வித பாதிப்பும் இல்லாமல் போராட்டம் நடைபெற்றதாகவும் கூறினார். இதேபோல அரசு மருத்துவமனை மருத்துவர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து பணியாற்றியதாக அவர் தெரிவித்தார்.