ஈரோடு- லஞ்ச புகாரில் சிக்கிய அதிகாரி வீட்டில் அதிரடி சோதனை

 

ஈரோடு- லஞ்ச புகாரில் சிக்கிய அதிகாரி வீட்டில் அதிரடி சோதனை

ஈரோடு

ஈரோடு மாவட்டத்தில் லஞ்ச புகாரில் சிக்கிய பொதுப்பணித்துறை அதிகாரியின் வீட்டில் போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் பணம் மற்றும் ஆவணங்கள் சிக்கியதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. ஈரோடு ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள பொதுப்பணித்துறை அலுவலகத்தில் கடந்த 13ஆம் தேதி லஞ்ச ஒழிப்புத்துறையினர் நடத்திய அதிரடி சோதனையில் ரூ.1.61 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக, பொதுப்பணித்துறை உதவி

ஈரோடு- லஞ்ச புகாரில் சிக்கிய அதிகாரி வீட்டில் அதிரடி சோதனை

இயக்குநர் மகேஷ் பாண்டியன்(50), இடைத்தரகர் ராம்குமார் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து லஞ்ச ஒழிப்புத்துறையினர் விசாரித்து வந்தனர். இந்நிலையில், ஈரோடு சங்குநகரில் உள்ள உதவி இயக்குநர் மகேஷ் பாண்டியன் வீட்டில் நேற்றிரவு டிஎஸ்பி திவ்யா தலைமையில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தினர். இதில், 66 ஆயிரம் ரூபாய் ரொக்கம் மற்றும் ஏராளமான சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

ஈரோடு- லஞ்ச புகாரில் சிக்கிய அதிகாரி வீட்டில் அதிரடி சோதனை

முதற்கட்டமாக பறிமுதல் செய்யப்பட்ட சொத்து ஆவணங்களின் மதிப்பு ரூ.30 லட்சத்திற்கு மேல் இருக்கும் என தெரியவந்துள்ளது. கைப்பற்றப்பட்ட மற்ற ஆவணங்களின் சொத்து மதிப்பு குறித்து போலீசார் தொடர்ந்து மதிப்பீடு செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், மகேஷ் பாண்டியனின் சொந்த ஊரான தேனியில் உள்ள வீடுகளிலும் லஞ்ச ஒழிப்பு சோதனை நடைபெற்று வருகிறது. விசாரணை முடிவில் தான் எவ்வளவு பணம் மற்றும் ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளது என்பது குறித்த உண்மை விபரம் தெரியவரும்.