ஆடு வளர்ப்பு, தேங்காய் உடைப்பு திட்டத்தில் மோசடி; இளைஞருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை!

ஆடு வளர்ப்பு, தேங்காய் உடைப்பு திட்டத்தில் மோசடி; இளைஞருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை!

ஈரோடு ,மாவட்டத்தில் முதலீட்டாளர்களிடம் பணம் பெற்று மோசடியில் ஈடுபட்ட இளைஞருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

ஆடு வளர்ப்பு, தேங்காய் உடைப்பு திட்டத்தில் மோசடி; இளைஞருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை!

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிப்பாளையத்தில் அசோக் பார்ம்ஸ் மற்றும் கோப்ராஸ் என்னும் நிறுவனம் இயங்கி வந்தது. இந்த நிறுவனத்தில் முதலீட்டாளர்கள் ரூ.1 லட்சம் கொடுத்தால் ஆடு குட்டி வழங்கி, அதனை 3 வருடங்கள் வளர்த்து திரும்பப்பெறுவதற்கு அதிக வட்டி தருவதாகவும், ரூ.50 ஆயிரம் கொடுத்தால் தேங்காய் வழங்கி அதிலிரிருந்து பருப்பு எடுத்து தருவதற்கு அதிக வட்டி தருவதாகவும் அறிவிக்கப்பட்டது.

ஆடு வளர்ப்பு, தேங்காய் உடைப்பு திட்டத்தில் மோசடி; இளைஞருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை!

அதனை நம்பிய முதலீட்டாளர்கள் 89 பேர் பணத்தை செலுத்திய நிலையில், மொத்தமாக ரூ.1,38,25,550 ரூபாயை அந்த கம்பெனியை நடத்தி வந்த இளைஞர் ராஜேஷ் மோசடி செய்திருக்கிறார். இது தொடர்பாக பாதிக்கப்பட்டவர்கள் கடந்த 2012ஆம் ஆண்டு அளித்த புகாரின் பேரில், குற்றப்பிரிவு போலீசார்

ஆடு வளர்ப்பு, தேங்காய் உடைப்பு திட்டத்தில் மோசடி; இளைஞருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை!

வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். கடந்த 8 ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்று வந்த இந்த வழக்கின் தீர்ப்பு வெளியானது. அப்போது, நிறுவன உரிமையாளர் ராஜேஷ்க்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூ.45 லட்சம் அபராதமும் விதித்து தமிழ்நாடு முதலீட்டாளர்கள் நல சிறப்பு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.