• December
    15
    Sunday

Main Area

Main



6 கிமீ தூரத்திற்கு கர்ப்பிணியை தூக்கிச் சென்ற மக்கள் ! ஆம்புலன்ஸ் வருவதற்குள் பிறந்த அழகான ஆண் குழந்தை

ERODE BABY
ERODE BABY

ஈரோடு மாவட்டத்தில் கனமழை காரணமாக ஆம்புலன்ஸ் வரமுடியாமல் பிரசவத்திற்காக கர்ப்பிணி ஒருவரை 6 கிலோமீட்டர் தூக்கிசெல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. ஆனாலும் மருத்துவமனை கொண்டு செல்லும் வழியிலேயே அழகான ஆண் குழந்தையை பெற்றெடுத்தார் அந்த பெண்.

BABY

ஈரோடு பர்கூர் மலைப்பகுதியை சேர்ந்த சுண்டப்பூர் கிராமத்தில் குமாரி என்பவருக்கு பிரசவ வலி ஏற்பட்டது. உடனடியாக ஆம்புலன்ஸ் வாகனத்திற்கு தகவல் அளிக்கப்பட்டது. ஆனால் சமீபத்தில் பெய்த கனமழையால் பாறைகள் விழுந்து வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டதால் ஆம்புலன்ஸ் வரவில்லை என கூறப்படுகிறது. இதையடுத்து கிராம மக்கள் ஒன்று சேர்ந்த ஒரு கட்டையில் குழந்தை தொட்டில் போல் கட்டி அதில் குமாரியை படுக்க வைத்தனர். பின்னர் 6 கிமீ தூரத்திற்கு தூக்கிக்கொண்டு சென்றனர். கிராம எல்லை முடிந்து பிரதான சாலையை அடைந்த உடன் ஒரு சரக்கு வாகனத்தில் பர்கூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். ஆனால் மருத்துவமனை செல்லும் வழியிலேயே குமாரிக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. அவருக்கு பிரசவம் பார்த்த மூதாட்டி ஒருவர் தாயும், சேயும் நலமுடன் இருப்பதாக தெரிவித்தார். பின்னர் குமாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அடுத்தக்கட்ட சிகிச்சை அளிக்கப்பட்டது. எனவே மறுபடியும் இதுபோன்ற இன்னல்களை சந்திக்காமல் இருக்க அரசு போர்க்கால அடிப்படையில் கிராமத்திற்கு சாலை வசதி அமைத்து தரவேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

2018 TopTamilNews. All rights reserved.