ஈரோடு மாவட்டத்தில் இதுவரை உரிய ஆணவமில்லாத ரூ.1.14 கோடி பறிமுதல்!

 

ஈரோடு மாவட்டத்தில் இதுவரை உரிய ஆணவமில்லாத  ரூ.1.14 கோடி பறிமுதல்!

ஈரோடு

ஈரோடு மாவட்டத்தில் தற்போதுவரை உரிய ஆவணங்களின்றி எடுத்துச்சென்ற 1 கோடியே 14 லட்சம் ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.

சட்டமன்றத் தேர்தலை யொட்டி, ஈரோடு மாவட்டத்திற்கு உட்பட்ட 8 தொகுதிகளில் பொதுமக்களுக்கு பரிசுப் பொருட்கள் மற்றும் பணம் பட்டுவாடா செய்யப்படுகிறதா? என்பதை கண்காணிக்கும் வகையில் மாவட்டம் முழுவதும் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு, உரிய ஆவணங்களின்றி வரும் பணத்தை பறிமுதல் செய்து வருகின்றனர்.

அதன்படி, ஈரோடு கிழக்கு தொகுதியில் நேற்று வரை ரூ.38 லட்சத்து 89 ஆயிரம் ரூபாயும், ஈரோடு மேற்கு தொகுதியில் 6 லட்சத்து 30 ஆயிரத்து 730 ரூபாய் பணமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மொடக்குறிச்சி தொகுதியில் 5 லட்சத்து 10 ஆயிரத்து 400 ரூபாயும், பெருந்துறை பகுதியில் 5 லட்சத்து 34 ஆயிரத்து 410 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் இதுவரை உரிய ஆணவமில்லாத  ரூ.1.14 கோடி பறிமுதல்!

இதேபோல், பவானி தொகுதியில் உரிய ஆவணங்கள் இல்லாத 11 லட்சத்து 52 ஆயிரத்து 400 ரூபாயும், அந்தியூர் பகுதியில் 6 லட்சத்து 54 ஆயிரத்து 400 ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கோபி தொகுதியில் 22 லட்சத்து 22 ஆயிரத்து 600 ரூபாய் பணமும், பவானிசாகர் தொகுதியில் 19 லட்சத்து 29 ஆயிரத்து 500 ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

தற்போதைய நிலவரப்படி, ஈரோடு மாவட்டம் முழுவதும் உரிய ஆவணங்கள் இல்லாத 1 கோடியே 14 லட்சத்து 43 ஆயிரத்து 340 ரூபாய் பணம் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதில் உரிமையாளர்கள் ஆவணங்களை சமர்ப்பித்ததால் 41 லட்சத்து 66 ஆயிரத்து 840 ரூபாய் திரும்ப ஒப்படைக்கப்பட்டுள்ளது. மேலும், 72 லட்சத்து 76 ஆயிரத்து 500 ரூபாய் மீதம் உள்ளது.