• July
    22
    Monday

Main Area

Erode

ராதாகிருஷ்ணன்

கல்லூரி மாணவியை வீடியோ எடுத்து 4 ஆண்டுகளில் 2 முறை கர்ப்பமாக்கி... பெட்டிக் கடையில் ’பெட் விரித்த’ காமக்கொடூரன்..!

பொள்ளாச்சி பாலியல் வீடியோ சம்பவத்தின் பரபரப்பு அடங்குவதற்குள் ஈரோடு அருகே ஆபாசமாக படம் எடுத்து மிரட்டி, பல ஆண்டுகளாக பாலியல் பலாத்காரம் செய்த புகாரில், மாணவிகள் பலர் புகார் அளித்த...


கோப்புப்படம்

நண்பருடன் செல்போனில் பேச்சு...திருமணத்துக்கு மறுப்பு தெரிவித்த பெண்ணுக்கு கத்தி குத்து!

ஈரோடு மாவட்டம் தாளவாடி அருகே உள்ள கிராமத்தை சேர்ந்தவர் ராமன். இவரது மகள் ரத்தினம்மாள் செவிலியர் படிப்பு முடித்து விட்டு கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் பனி புரிந்து வந்துள்ளா...

மனைவியையும் பாட்டியையும் பெட்ரோல் ஊற்றி கொளுத்த முயன்ற இளைஞன்;  ஈரோட்டில் பரபரப்பு?!..

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியை சேர்ந்தவர் செல்லத்துரை. லாரி டிரைவரான இவருக்கும், ஈரோடு மாவட்டம் மோச்சிகீரனார் வீதியை சேர்ந்த நிர்மலாவுக்கும் பேஸ்புக் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியிருக்கிறது. நிர்மலா, செல்லத்துரையை காதல் திருமணம் செய்துகொண்டார்.

காதல்

திருமணமான பின்பு செல்லத்துரைக்கு ஏற்கனவே திருமணமாகி விவாகரத்தான விஷயம் தெரியவந்துள்ளது. இதனால் நிர்மலா கோபித்துக்கொண்டு தன் பாட்டி மல்லிகா வீட்டுக்கு சென்றுவிட்டார். மனைவியை சமாதானம் செய்து தன்னோடு அழைத்துச் செல்ல பாட்டி வீட்டுக்கு சென்றிருக்கிறார் செல்லத்துரை. மனைவியை சமாதானம் செய்து தன்னோடு அனுப்பி வைக்கும்படி பாட்டியிடம் கேட்டிருக்கிறார். ஆனால் நிர்மலா வர மறுத்துவிட்டார். 

என்ன செய்வதென்று அறியாத செல்லத்துரை, குடித்துவிட்டு கையில் பெட்ரோல் கேனுடன் வந்து தற்கொலை மிரட்டல் விடுத்துள்ளார். அப்போதும் நிர்மலா மசியவில்லை, தன் மீது பெட்ரோலை ஊற்றிக்கொண்டு நிர்மலா மீதும், பாட்டியின் மீதும் ஊற்றியிருக்கிறான். இதனால் பீதியடைந்து அவர்கள் அலற, அக்கம்பக்கத்தினர் வந்து செல்லத்துரையை அடித்து உதைத்து கட்டிவைத்தனர்.

பின்னர் இதுகுறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்துக்கு விரைந்த போலீஸ், பெட்ரோல் ஊற்றியிருந்ததால் அவரை குளிக்க வைத்து அழைத்துச் சென்றனர். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.

கைது

இதற்கு முன்பே செல்லத்துரை மீது மகளிர் காவல்நிலையத்தில் நிர்மலா புகார் அளித்திருந்திருக்கிறார். அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் இரு தரப்பினரிடமும் பேசி கையெழுத்து வாங்கி அனுப்பி வைத்துள்ளனர். திடீரென யார் பேச்சையோ கேட்டுக்கொண்டு செல்லத்துரை தற்கொலை முயற்சி நாடகத்தை அரங்கேற்றியுள்ளார் என காவல்துறை தரப்பில் தெரிவித்தனர்.

Arunpandiyan Sat, 04/27/2019 - 14:30
burn alive love life Facebook Erode police arrest தீக்குளிப்பு க்ரைம்

English Title

Man try to burn his wife and grandmother got arrested?!...

News Order

0

Ticker

0 
கொலை

தகாத உறவில் ஈடுபட்ட மனைவி: தலையை வெட்டி ஊர்வலம் எடுத்து சென்ற கணவன்: அதிர வைக்கும் வாக்குமூலம்!

மனைவியின் தலையை வெட்டி கொன்றதோடு, அதை   இரு சக்கர வாகனத்தில் வைத்துக்கொண்டு கணவன் ஊர்வலமாகச் சென்ற சம்பவம்  அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
spiritual

ஒரு எலுமிச்சம் பழம் 30 ஆயிரம் ரூபாய்! ஈரோடு மாவட்டத்தில் நடந்த அதிசயம்!

ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சிக்கு அருகில் இருக்கிறது விளக்கேத்தி என்கிற கிராமம்.இதையடுத்துள்ள அண்ணாமலைப் பாளையத்தில்தான் ஒரு எலுமிச்சம் பழத்தை 30 ஆயிரம் ரூபாய்க்கு ஏலம் போயிருக்கிறத...
samsung

சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி ஏ7 (2018) மற்றும் கேலக்ஸி ஏ9 (2018) ஸ்மார்ட்போன்கள் அதிரடி விலை குறைப்பு

இந்தியாவில் சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி ஏ7 (2018) மற்றும் கேலக்ஸி ஏ9 (2018) ஸ்மார்ட்போன்களின் விலை அதிரடியாக குறைக்கப்பட்டுள்ளது.


rape

தனியார் பேருந்தில் 13 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை: என்ன நடக்கிறது தமிழகத்தில்?

தனியார் பேருந்தில் 13 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


women

அரசு வேலை வாங்கி தருவதாக 40 லட்சம் மோசடி செய்த பெண் கைது: போலி ஆவணம் தயாரித்தது அம்பலம்!

அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி 40 லட்சம் ரூபாய் மோசடி செய்த பெண்ணை போலீஸார்  கைது செய்துள்ளனர்.

கும்டாபுரம் பீரேஸ்வரர் கோயில் சாணி குண்டம் இறங்கும் விநோத திருவிழா!

ஈரோடு மாவட்டம் தாளவாடி அருகே அமைந்துள்ளது கும்டாபுரம் மலைக்கிராமம். இங்கு பீரேஸ்வரர் கோவில் உள்ளது. சுமார் 300 ஆண்டுகள் பழமையான இந்த கோவிலில் ஆண்டுதோறும் ஐப்பசி மாதம் சாணியடி திருவிழா கொண்டாடப்படுவது வழக்கம்.

ஆண்டுதோறும் தீபாவளி பண்டிகை முடிந்த 3-வது நாள் இந்த சாணியடி திருவிழா நடைபெறுகிறது. அதன்படி நேற்று திருவிழா கொண்டாடப்பட்டது. 

saanam

அதைத்தொடர்ந்து சாமி அழைத்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. ஊர்க்குளத்துக்கு பூசாரி தலைமையில் பக்தர்கள் சாமியை அழைத்து வந்து வழிபாடு செய்தனர். சாமியை ஒரு கழுதை மீது வைத்து ஊர்வலமாக கோவிலுக்கு எடுத்து வந்தனர். பின்னர் பீரேஸ்வரருக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது .அங்கிருந்து கோவிலுக்கு பின்புறம் சென்ற பூசாரி, அங்கு குவிக்கப்பட்டு இருந்த சாணத்துக்கும் சிறப்பு பூஜை செய்தார்.

 அதைத்தொடர்ந்து சாணியடி திருவிழா தொடங்கியது. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் குவித்து வைத்திருந்த சாணியை கைகளில் எடுத்து உருட்டி சிறு உருண்டைகளாக செய்து ஒருவர் மற்றவர் மீது வீசினார்கள். குவித்திருந்த சாணம் முடியும் வரை இவ்வாறு சாணியை அடித்து உற்சாகமாக கொண்டாடினார்கள்.

saanam

அப்போது கூடி இருந்த பெண்கள் கைகளை தட்டி சாணி எறியும் பக்தர்களை உற்சாகப்படுத்தினார்கள். பின்னர் பக்தர்கள் குளத்தில் நீராடிவிட்டு மீண்டும் கோவிலுக்கு வந்து பீரேஸ்வர சாமியை வழிபட்டனர்.இதனைஅடுத்து சாணி குண்டம் இறங்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

சாணியடி விழா முடிந்ததும் ஆங்காங்கே சிதறிக்கிடந்த சாணிகளை அக்கம்பக்கத்தில் உள்ள விவசாயிகள் சேகரித்து தங்கள் விவசாய நிலங்களுக்கு கொண்டு சென்றனர்.விழாவை முன்னிட்டு கும்டாபுரம் கிராமமே விழாக்கோலம் பூண்டு இருந்தது.

admin Sat, 11/10/2018 - 16:14
Erode festival erode kumdapuram beereshwara temple temple festival saanam ஆன்மிகம்

English Title

Erode near temple Cow dung Festival celebrated very well 
2018 TopTamilNews. All rights reserved.