அலங்காநல்லூரில் நிரந்தர பார்வையாளர்கள் கேலரி விரைவில்!

 

அலங்காநல்லூரில் நிரந்தர பார்வையாளர்கள் கேலரி விரைவில்!

தமிழ்நாடு மீனவர் உரிமை பாதுகாப்பு இயக்கத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் திருமுருகன், உயர் நீதிமன்ற தாக்கல் செய்த மனுவில், “மதுரை மாவட்டத்தில் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூரில் நடைபெறும் ஜல்லிக்கட்டு உலகளவில் பிரபலமானது. இந்த ஜல்லிக்கட்டைக் காண லட்சக்கணக்கானோர் வருவது வழக்கம். மதுரையில் ஜல்லிக்கட்டு நடைபெறும் இடங்களில் பார்வையாளர்கள், காளைகள், மாடுபிடி வீரர்களுக்குப் போதுமான இடவசதி செய்து கொடுப்பதில்லை. இதனால் பார்வையாளர்கள் மரங்களில் ஏறியும், வீடுகளின் மாடிகளில் நின்றும் ஆபத்தான முறையில் ஜல்லிக்கட்டை பார்க்கின்றனர்.

அலங்காநல்லூரில் நிரந்தர பார்வையாளர்கள் கேலரி விரைவில்!

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் 10 ஆயிரம் பேர் பார்க்கும் அளவிலேயே கேலரி அமைக்கப்படுகிறது. அலங்காநல்லூரில் நிரந்தர பார்வையாளர்கள் கேலரி அமைக்கப்படும் என துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்து பல ஆண்டுகளாகியும் நிரந்தர கேலரி அமைக்கப்படவில்லை. எனவே, அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு பார்வையாளர்களுக்கு நிரந்தர கேலரி கட்ட உத்தரவிட வேண்டும்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

அலங்காநல்லூரில் நிரந்தர பார்வையாளர்கள் கேலரி விரைவில்!

இந்த மனு தலைமை நீதிபதி சஞ்சிப் பானர்ஜி, நீதிபதி ஹேமலதா ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் ஆர். அழகுமணி வாதிட்டார். பின்னர் மனுதாரர் தனது கோரிக்கை தொடர்பாக மதுரை மாவட்ட ஆட்சியரிடம் புதிதாக மனு அளிக்க வேண்டும். ஆட்சியர் அந்த மனுவைப் பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது.