2021ம் ஆண்டில் 5ஜி தொலைத்தொடர்பு சேவை… 6 வருஷத்துல சந்தாதாரர்களின் எண்ணிக்கை 35 கோடியை தாண்டும்…

2021ம் ஆண்டில் 5ஜி தொலைத்தொடர்பு சேவை… 6 வருஷத்துல சந்தாதாரர்களின் எண்ணிக்கை 35 கோடியை தாண்டும்…

நம் நாட்டில் 2021ம் ஆண்டில் 5ஜி தொலைத்தொடர்பு சேவை அமலுக்கு வரும் என்று தொலைத்தொடர்பு நிறுவனமான எரிக்சன் கணித்துள்ளது.

நம் நாட்டில் கடந்த சில ஆண்டுகளாக தொலைத்தொடர்பு துறை புதிய பரிமாண வளர்ச்சி கண்டு வருகிறது. தொலைத்தொடர்பு சேவையில் ஈடுபட்டு வரும் ஜியோ, ஏர்டெல், வி ஆகிய நிறுவனங்கள் நாடு முழுவதும் 4ஜி சேவையை விரிவுப்படுத்தி வருகின்றன. 5ஜி சேவை தொடர்பான பரிசோதனை முயற்சிகளையும் நிறுவனங்கள் மேற்கொண்டு வருகின்றன. 5ஜி தொலைத்தொடர்பு சேவை எப்போது வரும் என்று பலரும் ஆவலுடன் எதிர்பார்க்க தொடங்கி விட்டனர்.

2021ம் ஆண்டில் 5ஜி தொலைத்தொடர்பு சேவை… 6 வருஷத்துல சந்தாதாரர்களின் எண்ணிக்கை 35 கோடியை தாண்டும்…
5ஜி

இந்த சூழ்நிலையில் நம் நாட்டில் 5ஜி தொலைத்தொடர்பு சேவை 2021ம் ஆண்டில் நடைமுறைக்கு வரும் என்று எரிக்சன் நிறுவனம் கணித்துள்ளது. எரிக்சன் நிறுவனத்தின் நெட்வொர்க் சொல்யூசன்ஸ் பிரிவு தலைவர் நிதின் பன்சால் கூறியதாவது: அடுத்த ஆண்டு முன்பகுதியில் அலைகற்றை ஏலம் நடந்தால், அந்த ஆண்டு இந்தியாவில் 5ஜி தொலைத்தொடர்பு சேவை அமலுக்கு வரும்.

2021ம் ஆண்டில் 5ஜி தொலைத்தொடர்பு சேவை… 6 வருஷத்துல சந்தாதாரர்களின் எண்ணிக்கை 35 கோடியை தாண்டும்…
செல்போன் பயன்படுத்தும் மக்கள்

2026ம் ஆண்டில் உலகின் மொத்த மக்கள் தொகையில் 60 சதவீதம் பேர் 5ஜி சேவையை பயன்படுத்துவர், 5ஜி சந்தாதாரர்களின் எண்ணிக்கை 350 கோடியை எட்டும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இதே ஆண்டில் இந்தியாவில் 5ஜி சந்தாதாரர்களின் எண்ணிக்கை 35 கோடியை தாண்டும், அந்த ஆண்டில் இந்தியாவின் மொத்த மக்கள் தொகையில் 27 சதவீதம் பேர் 5ஜி சேவையை பயன்படுத்துவர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.