தனியார் விடுதியில் ஓபிஎஸ் உடன் ஈபிஎஸ் திடீர் சந்திப்பு!

 

தனியார் விடுதியில் ஓபிஎஸ் உடன் ஈபிஎஸ் திடீர் சந்திப்பு!

நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுக தோல்வி அடைந்ததை அடுத்து தோல்விக்கான காரணம் குறித்து நேற்று 9 மாவட்ட செயலாளர்களுடன் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார். சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகத்தில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் ஜெயக்குமார் ,திநகர் சத்தியா, பெஞ்சமின் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தனியார் விடுதியில் ஓபிஎஸ் உடன் ஈபிஎஸ் திடீர் சந்திப்பு!

ஆலோசனை முடிந்து செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி, கொரோனாவை கட்டுப்படுத்த தமிழக அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். சசிகலா ஆடியோ குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், சசிகலா அதிமுக உறுப்பினர் இல்லை . சசிகலா அமமுக கட்சி தொண்டர்களுடன் பேசிய ஆடியோதான் வெளியானது . அதிமுக தொண்டர்களுடன் சசிகலா பேசவில்லை.குழப்பம் விளைவிக்கும் சசிகலாவின் முயற்சி வெற்றி பெறாது” என்றார்.

தனியார் விடுதியில் ஓபிஎஸ் உடன் ஈபிஎஸ் திடீர் சந்திப்பு!

இந்நிலையில் சென்னையில் உள்ள தனியார் விடுதியில் ஓ.பன்னீர்செல்வம் – எடப்பாடி பழனிசாமி இருவரும் சந்தித்து பேசி வருகின்றனர். சென்னை அதிமுக தலைமை அலுவலகத்தில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் நேற்று ஓபிஎஸ் பங்கேற்காத நிலையில் இன்று எடப்பாடி பழனிசாமி அவரை சந்தித்து பேசி வருகிறார். இருவருக்குள் கருத்து வேறுபாடு இருப்பதாக கூறப்பட்ட நிலையில் ஓபிஎஸ் சகோதரர் மறைவு குறித்து சந்தித்து பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது.

தனியார் விடுதியில் ஓபிஎஸ் உடன் ஈபிஎஸ் திடீர் சந்திப்பு!

முன்னதாக நேற்றைய ஆலோசனை கூட்டத்தில் ஓபிஎஸ் பங்கேற்காதது குறித்து பதிலளித்த ஈபிஎஸ், ஓபிஎஸ் உடன் எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை. அவர் புதுமனை புகுவிழா காரணமாக ஆலோசனையில் பங்கேற்க்கவில்லை என்று கூறியது குறிப்பிடத்தக்கது.