சேலத்தில் இபிஎஸ் – தேனியில் ஓபிஎஸ் -பதாகை ஏந்தி நாளை முழக்கம்

 

சேலத்தில் இபிஎஸ் – தேனியில் ஓபிஎஸ் -பதாகை ஏந்தி நாளை முழக்கம்

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி இருவரும் டெல்லி சென்று நேற்று பிரதமர் மோடியை சந்தித்தவர்கள், இன்று உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேசியுள்ளனர். இந்நிலையில் தமிழ்நாடு திரும்பும் இருவரும் நாளை போராட்டத்தினை முன்னெடுக்கிறார்கள்.

சேலத்தில் இபிஎஸ் – தேனியில் ஓபிஎஸ் -பதாகை ஏந்தி நாளை முழக்கம்

நீட், பெட்ரோல், டீசல் விலை குறைப்பு, சிலிண்டருக்கு ரூ.100 மானியம், இல்லத்தரசிகளும் மாதம் ஆயிரம் ரூபாய் என தேர்தலில் திமுக கொடுத்த வாக்குறுகள் எதுவும் நிறைவேற்றப்பட வில்லை என்பதை கண்டித்து நாளை இந்த போராட்டம் நடைபெற்ற இருக்கிறது.

சேலத்தில் உள்ள தனது இல்லத்தின் முன்பு பதாகை ஏந்தி எடப்பாடி பழனிச்சாமியும், தேனி அல்லது சென்னையில் உள்ள இல்லத்தின் முன்பு பதாகை ஏந்தி ஓ.பன்னீர்செல்வமும் முழக்கம் எழுப்ப இருக்கின்றனர்.

சேலத்தில் இபிஎஸ் – தேனியில் ஓபிஎஸ் -பதாகை ஏந்தி நாளை முழக்கம்

இது தொடர்பாக ஓ.பன்னீர்செல்வமும், எடப்பாடி பழனிச்சாமியும் இணைந்து கடந்த 23ம் தேதி அன்றே அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

அதில், தேர்தல் பிரச்சாரத்தின் போது திமுக தலைவர் ஸ்டாலினும், அவருடைய மகன் உதயநிதி ஸ்டாலினும், அவருடைய தங்கை கனிமொழியும், மாமன் மகள் தயாநிதியும் தமிழ்நாட்டில் திமுக ஆட்சி அமைந்தவுடன் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்று ஊரெங்கும் பிரச்சாரம் செய்தார்கள்.

நீட் தேர்வை ரத்து செய்வது என்ற சூத்திரம் தங்களுக்கு மட்டுமே தெரியும் என்று சத்தியம் செய்தார்கள். அவர்கள் மட்டுமல்லாமல் திமுகவின் மூத்த தலைவர்களும் பிரச்சார வியூக ஆலோசகரின் அறிவுரையின்படி தயாரான தேர்தல் அறிக்கையில் நீட் தேர்வு ரத்து செய்யப்படுவது உறுதி உறுதி என்று ஒவ்வொரு கூட்டத்திலும் முழங்கியதை கேட்டு சரி ஏதோ செய்வார்கள் போலிருக்கிறது என்று தமிழ்நாட்டு வாக்காளர்கள் நம்பி வாக்களித்தார்கள்.

சேலத்தில் இபிஎஸ் – தேனியில் ஓபிஎஸ் -பதாகை ஏந்தி நாளை முழக்கம்

சொற்ப வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்திருக்கும் திமுக, தற்போது நீட் தேர்வுக்கு தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட பிறகு நீட் தேர்வுக்குத் தயாராகும்படி மாணவர்களுக்கு உத்தரவிட்டிருக்கிறது. எத்தனை பெரிய நம்பிக்கை துரோகத்தை தமிழ்நாட்டு மாணவர்களுக்கு இழைத்திருக்கிறது திமுகவும் அது அமைத்திருக்கும் அரசும்.

தங்களுக்கு மட்டுமே தெரிந்த வல்லமையையும் சூத்திரத்தையும் பயன்படுத்தி திமுக அரசு நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்ற எதிர்பார்ப்பு தமிழ்நாட்டு மக்களுக்கு இருக்கிறது. மக்களின் இந்த எதிர்பார்ப்பை உடனே நிறைவேற்றும் வகையில் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று தமிழ்நாட்டு மாணவர்கள் அவர்தம் பெற்றோர்கள் சார்பாக அதிமுக அரசு கேட்டுக் கொள்கிறது என்று தெரிவித்துள்ளனர்.

சேலத்தில் இபிஎஸ் – தேனியில் ஓபிஎஸ் -பதாகை ஏந்தி நாளை முழக்கம்

மேலும், எப்போதெல்லாம் திமுக ஆட்சிக்கு வருகிறதோ அப்போதெல்லாம் மக்களின் அடிப்படைத் தேவைகளுக்கான பொருட்களின் விலையும் கட்டுமானப் பொருட்களின் விலை உயர்வு வாடிக்கையாகிவிட்டது. பொருளாதாரமும் புரியாமல் மக்களின் துன்ப துயரங்களூம் தெரியாமல் மனம் போனபடி திமுக செயல்படுவதுதான் இந்த அவல நிலைக்கு காரணமாக, பாதிக்கப்பட்டு வாழ்வாதாரத்தை இழந்து வருமானம் சுருங்கிப்போய் அல்லல்படும் மக்களின் துன்பத்தைப் போக்க திமுக அரசு உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

திமுக ஆட்சி அமைந்தவுடன் பெட்ரோல் விலையை ரூபாய் 5 ம் டீசல் விலை ரூபாய் 4ம் குறைப்பதாக சமையல் எரிவாயு சிலிண்டருக்கு ரூ 3 ரூபாய் நூறு ரூபாய் மானியம் தருவதாக வாக்களித திமுக இதுவரை தனது வாக்குறுதியை பற்றி வாய் திறக்காமல் இருக்கிறது. இப்படி நூற்றுக்கணக்கான வாக்குறுதிகளை தமிழ்நாட்டு மக்களுக்காக குறிப்பாக தமிழ்நாட்டு பெண்களுக்காக அளித்த திமுக அந்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவது தான் நாணயமான செயல். அதுவே அரசியல் நாகரீகம் கூட. மாறாக திமுக அவற்றைப் பற்றி பேசாமல் அணில் ஓடுவதால் மின்சாரம் தடைபடுகிறது என்று கூச்சமின்றி பேசுகிறது. தமிழ்நாட்டில் இன்று பலமுறை மின்வெட்டு நாள்தோறும் நடைபெறுகிறது.

சேலத்தில் இபிஎஸ் – தேனியில் ஓபிஎஸ் -பதாகை ஏந்தி நாளை முழக்கம்

திமுக அரசு பொய் வழக்கு போடும் மலிவான அரசியல் ஆயுதத்தைக் கையில் எடுத்திருக்கிறார்கள். அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை அழித்துவிடலாம் ஒழித்து விடலாம் என்று கனவு கண்டால் அது பகல் கனவாகவே முடியும். இது போன்ற அடக்குமுறைகளை எல்லாம் தாங்கி வலுப்பெற்று இயக்கம்தான் அதிமுக. ஆகவே இந்த பிற்போக்குத் தனத்தை கைவிட்டு நேர்மையாகவும் திறமையாகவும் ஆட்சி செய்ய திமுக முன் வரட்டும்.

தமிழ்நாட்டு மக்களின் நலனுக்காகவும் தமிழ்நாட்டு பொருளாதார வளர்ச்சி மேம்படவும் மேற்சொன்ன கோரிக்கைகளை திமுக அரசின் கவனத்திற்குக் கொண்டுவர அண்ணா திமுக கழகம் விழைகிறது. திமுக அரசின் மெத்தனப் போக்கை களையவும் அக்கறையுடன் மக்கள் குரலுக்கு செவிசாய்க்க செய்யவும் 28.7. 2021 புதன்கிழமை அன்று காலை 10 மணி அளவில் உடன்பிறப்புகள் மாநகராட்சி. நகராட்சி. பேரூராட்சி. ஒன்றியம், ஊராட்சி ஆகிய பகுதிகளில் தங்கள் வீடுகளின் முன்னே பதாகைகளை ஏந்தி கவனயீர்ப்பு முழக்கங்களை எழுப்பி தமிழ்நாட்டு மக்களின் உரிமைக் குரலாய் ஒலிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம். கூடி குரல் எழுப்புவோம் அது ஆளுவோரின் செவிப்பறையை சென்று சேரட்டும் என்றும் தெரிவித்திருந்தார்கள்.