ஜெயக்குமார் மீது பரிவு காட்டிய முதல்வர்!!

 

ஜெயக்குமார் மீது பரிவு காட்டிய முதல்வர்!!

தூத்துக்குடி மாவட்ட எஸ்.பியாக தற்போதைய எஸ்.பியான ஜெயக்குமாரே நீடிக்க வேண்டும் என்கிற பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று, ஜெயக்குமாரின் இடமாற்ற உத்தரவை ரத்து செய்திருக்கிறது அரசு.
தூத்துக்குடி மாவட்டத்தில் ஸ்டெர்லைட் ஆலை அசாதாரண சூழ்நிலைக்கு பிறகு அமைதியான தூத்துக்குடி, சாத்தான்குளம் ஜெயராஜ், பென்னிக்ஸ் இறப்பின் மூலம் மீண்டும் அசாதார சூழ்நிலைக்கு சென்றது. அப்போது தூத்துக்குடி மாவட்ட எஸ்.பியாக நியமிக்கப்பட்டவர்தான் எஸ்.ஜெயக்குமார். இவரின் வருகைக்கு பிறகு போலீஸ், பொதுமக்களிடையே இருந்து வந்த உக்கிரம் குறைந்திருந்தது. இருதரப்புமே எங்கேயும் முட்டிக் கொள்ளவில்லை. மனதளவில் மக்களையும், காவல்துறையினரையும் கட்டிப்போட்டார் எஸ்.பி.

May be an image of 1 person and standing

இந்தநிலையில் எஸ்.பி ஜெயக்குமார் மாற்றப்பட்தாக நேற்று வெளியிடப்பட்ட அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருந்தது. எட்டு மாதத்தில் ஏன் மாற்றப்பட்டார் என்கிற கேள்வி எழுந்தது. சிறு சிறு அளவில் எழுந்த புகார் என்றும், அவரே விரும்பி மாற்றம் கேட்டார் என்றும் தகவல் பரவி வந்தன.

இதற்கிடையே மாவட்ட எஸ்.பியின் மாற்றல் உத்தரவு ரத்து செய்யப்பட்டதாக தகவல் சொல்லப்படுகிறது. நேற்று தேர்தல் பிரச்சாரத்தை முடித்து தூத்துக்குடி மறவன்மடத்தில் உள்ள சத்யா ரிசார்ட்ல் தங்கியிருந்த தமிழக முதல்வருக்கு தகவல் சொல்லப்பட்டதாம். தற்போதைய எஸ்.பியே தொடர்ந்து சில காலம் தூத்துக்குடியில் எஸ்.பியாக இருக்க வேண்டும். பிரச்னைகளை எளிதில் கையாளுகிறார் என்று சொல்லப்பட்டதை ஏற்றுக் கொண்ட முதல்வர், நேற்று வெளியிடப்பட்ட உத்தரவில் ஜெயக்குமாரின் மாற்றம் உத்தரவை ரத்து செய்ய பரிந்துரை செய்தாராம். அதன் அடிப்படையில் தொடர்ந்து தூத்துக்குடி மாவட்ட எஸ்.பியாக ஜெயக்குமாரே பணியாற்றப்போகிறார் என்கிற தகவல் சொல்லப்படுகிறது.