சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு அறிவிக்கையை தமிழில் வெளியிட்ட ஆர்வலர்கள்!

 

சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு அறிவிக்கையை தமிழில் வெளியிட்ட ஆர்வலர்கள்!

சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு அறிவிக்கையை தமிழில் மொழி பெயர்த்து வழங்க முடியுமா என்று சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பிய நிலையில், தமிழில் அதை சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் வெளியிட்டிருப்பது வரவேற்பைப் பெற்றுள்ளது.
மத்திய அரசு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு வரைவு அறிவிக்கையை வெளியிட்டுள்ளது. இது பற்றி மக்கள் தங்கள் கருத்துக்களை ஆகஸ்ட் 11ம் தேதிக்குள் தெரிவிக்கலாம் என்று கால அவகாசம் வழங்கப்பட்டது.

சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு அறிவிக்கையை தமிழில் வெளியிட்ட ஆர்வலர்கள்!
மக்கள் புரிந்துகொள்ளும் வகையில் அனைத்து மொழிகளிலும் இதை வெளியிட வேண்டும் என்று டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், கால அவகாசத்தை நீட்டித்தது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு மேல் முறையீடு செய்துள்ளது. தமிழ் உள்ளிட்ட மொழிகளில் மொழிபெயர்த்து தராமலும் உள்ளது.
மத்திய அரசு மொழி பெயர்த்துத் தரும். இத்தனை மொழிகளில் மொழி பெயர்க்க தாமதம் ஆகும். இன்னும் நாள்தான் இருக்கிறதே என்று தமிழக பா.ஜ.க நிர்வாகிகள் பேசி வருகின்றனர்.

சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு அறிவிக்கையை தமிழில் வெளியிட்ட ஆர்வலர்கள்!

ஆனால், இதில் உள்ள ஆபத்து காரணமாகவே மத்திய அரசு மொழி பெயர்க்கத் தயங்குகிறது என்று எதிர்க் கட்சிகள் குற்றம்சாட்டுகின்றன.
இந்த அறிவிக்கைக்குத் தடை கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. தடை விதிக்க மறுப்பு தெரிவித்த உயர் நீதிமன்றம், தமிழில் மொழி பெயர்த்து வழங்குவது பற்றி மத்திய அரசின் கருத்தைகேட்டிருந்தது. 13ம் தேதி இது பற்றி மத்திய அரசு பதில் அளிக்க உத்தரவிடப்பட்டிருந்தது.

சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு அறிவிக்கையை தமிழில் வெளியிட்ட ஆர்வலர்கள்!
இந்த நிலையில் சுற்றச்சூழல் ஆர்வர்கள், அமைப்புகள் அனைவரும் ஒன்றிணைந்து இந்த சுற்றச்சூழல் தாக்க மதிப்பீடு வரைவு அறிவிக்கையை மொழிபெயர்ப்பு செய்து வெளியிட்டுள்ளனர். மக்கள் பதிப்பாக இது இணையதளங்களில் வெளியாகி உள்ளது.
இதை www.yaavarum.com மற்றும், www.Learnagriculture.in என்ற தளத்திலும் காணலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சமூக, சுற்றச்சூழல் ஆர்வலர்களின் இந்த முயற்சிக்கு பலரும் பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர்.