சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு வரைவு தமிழில் தயார்! – மத்திய அரசு தகவல்

சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு வரைவு தமிழில் தயார்! – மத்திய அரசு தகவல்

சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு அறிவிக்கை தமிழில் மொழி பெயர்த்துவிட்டோம், மேல் முறையீடு காரணமாக வெளியிடாமல் உள்ளோம் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.
குறிப்பிட்ட முதலீட்டில் தொழில் நிறுவனங்கள் தொடங்கும்போது சுற்றுச்சூழல் அனுமதி தேவையில்லை என்பது உள்ளிட்ட பல்வேறு அம்சங்களைக் கொண்ட

சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு வரைவு தமிழில் தயார்! – மத்திய அரசு தகவல்

சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு வரைவு உள்ளது என்ற குற்றச்சாட்டு உள்ளது. இந்த வரைவு அறிவிக்கையை மத்திய அரசு ஆங்கிலம் மற்றும் இந்தியில் மட்டும் வெளியிட்டிருந்தது. மற்ற மாநில மொழிகளிலும் இதை வெளியிட வேண்டும் என்று டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆனால், அதை எதிர்த்து மத்திய அரசு உச்ச நீதிமன்றம் சென்றது.

சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு வரைவு தமிழில் தயார்! – மத்திய அரசு தகவல்
இந்த நிலையில் இந்த வரைவு அறிவிக்கையை தடை செய்யக் கோரியும், வரைவை தமிழில் வெளியிட உத்தரவிடக் கோரியும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. மீனவர் அமைப்பு சார்பில் தொடரப்பட்ட வழக்கில், மத்திய அரசு பதில் அளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இன்று விசாரணையின் போது ஆஜரான மத்திய அரசு வழக்கறிஞர்,

சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு வரைவு தமிழில் தயார்! – மத்திய அரசு தகவல்

சுற்றுச்சூழல் மதிப்பீடு வரைவு அறிவிக்கை தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு தயார் நிலையில் உள்ளது. இது தொடர்பான மேல்முறையீடு வழக்கு நிலுவையில் உள்ளதால் வெளியிடப்படவில்லை என்று கூறினார். இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், இது தொடர்பாக மத்திய அரசு எழுத்துப்பூர்வமாக பதிலை வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கை வருகிற 19ம் தேதிக்கு ஒத்திவைத்தனர். இந்த வரைவை தமிழ் ஆர்வலர்கள் ஏற்கனவே மொழிபெயர்த்து இணையத்தில் வெளியிட்டுவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.