“அடுத்த 2 நாட்களுக்குள் நுழைவு வரியை கட்டியாக வேண்டும்” – நடிகர் தனுஷுக்கு உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

 

“அடுத்த 2 நாட்களுக்குள் நுழைவு வரியை கட்டியாக வேண்டும்” – நடிகர் தனுஷுக்கு உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

வெளிநாட்டு இறக்குமதி காருக்கு நுழைவு வரி வசூலிக்க தடை கோரிய நடிகர் விஜய் தாக்கல் செய்த வழக்கை உயர் நீதிமன்ற தனி நீதிபதி சுப்பிரமணியம் விசாரித்தார். வழக்கு இறுதி விசாரணையின்போது சரமாரியாக விமர்சித்த நீதிபதி, விஜய் ரீல் ஹீரோவாக மட்டும் இல்லாமல் நிஜ வாழ்க்கையிலும் ரியல் ஹீரோவாக இருக்க வேண்டும் என்றும், வரி என்பது நன்கொடையல்ல, அது கட்டாயப் பங்களிப்பு போன்ற கருத்துக்களை கூறியும் மிகக் கடுமையாக திட்டியிருந்தார். கூடவே 1 லட்சம் ரூபாய் அபராதாம் விதித்தும் உத்தரவிட்டிருந்தார். தற்போது விஜய் தரப்பு மேல் முறையீடு செய்திருக்கிறது.

“அடுத்த 2 நாட்களுக்குள் நுழைவு வரியை கட்டியாக வேண்டும்” – நடிகர் தனுஷுக்கு உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

இந்நிலையில், நடிகர் தனுஷும் தனது இறக்குமதி காருக்கு நுழைவு வரி விலக்கு கோரி 2015ஆம் ஆண்டு தாக்கல் செய்திருந்தார். இறக்குமதி வாகனங்களுக்கு நுழைவு வரி விதிக்க தடை விதித்து கேரள உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஏராளமான வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. கேரள உயர் நீதிமன்றத்தில் உத்தரவை எதிர்த்த வழக்கில் உச்ச நீதிமன்றம், நுழைவு வரி வசூலிக்க மாநில அரசுகளுக்கு அதிகாரம் உள்ளதாக 2019ஆம் ஆண்டு தீர்ப்பளித்த்து. 2015ஆம் ஆண்டு வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட ரோல்ஸ் ராய்ஸ் காருக்கு நுழைவு வரி வசூலிக்க தடை கோரி நடிகர் தனுஷ், உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

“அடுத்த 2 நாட்களுக்குள் நுழைவு வரியை கட்டியாக வேண்டும்” – நடிகர் தனுஷுக்கு உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

இந்த வழக்கு அதே நீதிபதி முன்னிலையிலேயே இன்று விசாரணைக்கு வந்தது. இதனால் இந்த வழக்கின் மீதான எதிர்பார்ப்பு கூடியது. நினைத்தது போலவே தனுஷையும் மிக காட்டமாக நீதிபதி சுப்பிரமணியம் விமர்சித்திருந்தார். அப்போது தனுஷ் தரப்பில் வாபஸ் வாங்குவதாக தெரிவிக்கப்பட்டது. அப்போது சரமாரியாக விமர்சித்த நீதிபதி, “தனது வண்டிக்கு பெட்ரோல் போடும்போது ஜிஎஸ்டி வரி கட்ட முடியவில்லை என்று ஒரு பால்காரர் நீதிமன்றத்தை நாடுவாரா? தனது வண்டிக்கு பெட்ரோல் போடும் ஒரு பால்காரர் கூட வரி செலுத்தும்போது நீங்கள் செலுத்தினால் என்ன?

“அடுத்த 2 நாட்களுக்குள் நுழைவு வரியை கட்டியாக வேண்டும்” – நடிகர் தனுஷுக்கு உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

மக்கள் வரிப்பணத்தில் போடும் சாலையை பயன்படுத்தும்போது, அதற்கான வரியை செலுத்த வேண்டியது தானே? இன்று பிற்பகல் 2:15 மணிக்குள் நுழைவு வரி பாக்கி குறித்து வணிக வரித்துறை தனுஷுக்கு தெரிவிக்க வேண்டும். இன்று பிற்பகல் 2:15 மணிக்கு இறுதி தீர்ப்பு வழங்கப்படும்” என்றார். தற்போது இறுதி உத்தரவைப் பிறப்பித்திருக்கிறார் நீதிபதி. தனுஷ் தரப்பில் நுழைவு வரி கட்ட சம்மதம் தெரிவித்ததால் அடுத்த 2 நாட்களுக்குள் நுழைவு வரி பாக்கியான ரூ.30.30 லட்சத்தைக் கட்ட வேண்டும் என உத்தரவிட்டார். நடிகர் தனுஷ் தன்னுடைய மனுவில் நடிகர் என்று குறிப்பிடததால் கோபமடைந்த நீதிபதி, மனுதாரர்கள் தங்கள் விவரங்களை கூறாமல் தாக்கல் செய்யும் வழக்குகளை பட்டியலிடக் கூடாது என பதிவாளருக்கும் உத்தரவிட்டார். இந்த மாதிரியான வழக்குகள் சுமை என்றும் அவர் விமர்சித்தார்.