இயக்குனர் சங்கருக்கு எதிராக ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்ட்

 

இயக்குனர் சங்கருக்கு எதிராக ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்ட்

எழுத்தாளர் ஆரூர் தமிழ்நாடன், எழுதிய ஜூகிபா என்ற கதையை எந்திரன் என்ற பெயரில் படம் எடுத்ததாக தொடரப்பட்ட வழக்கில் இயக்குனர் சங்கருக்கு எதிராக ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்ட்டை சென்னை எழும்பூர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழ்நாடன் வழக்கை ரத்து செய்யக்கோரி ஷங்கர் தொடர்ந்த வழக்கை உயர் மற்றும் உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்ததால், எழும்பூரில் மீண்டும் விசாரணை நடைபெற்றது. விசாரணையின்போது ஷங்கரும், அவரது வழக்கறிஞரும் ஆஜராகவில்லை. புகார்தாரர் தரப்பு சாட்சி விசாரணைக்காக வழக்கு பிப்ரவரி 19 ஆம் தேதி ஒத்திவைக்கப்பட்டது.

இயக்குனர் சங்கருக்கு எதிராக ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்ட்

கடந்த 2010ம் ஆண்டு சங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் மற்றும் ஐஸ்வர்யா ராய் நடித்த ’எந்திரன்’ திரைப்படம் வெளியானது. இந்த படத்தின் கதை தன்னுடையது எனவும், காப்புரிமை சட்டத்தின் கீழ் ரூ.1 கோடி இழப்பீடு வழங்கக் கோரியும் எழுத்தாளர் ஆரூர் தமிழ்நாடன் வழக்கு தொடர்ந்தார். என்னுடைய ‘எந்திரன்’ படத்துக்கும், மனுதாரரின் கதைக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்றும் எனது கதையில் பல மாற்றங்கள் உள்ளன என்றும் சங்கர் தரப்பில் முன்னதாக தெரிவிக்கப்பட்டது