கல்விக்கட்டணம் செலுத்த வேண்டும் என எஸ்.எம்.எஸ் அனுப்பிய பள்ளிகளில் விசாரணை- அமைச்சர் செங்கோட்டையன்

கல்விக்கட்டணம் செலுத்த வேண்டும் என எஸ்.எம்.எஸ் அனுப்பிய பள்ளிகளில் விசாரணை- அமைச்சர் செங்கோட்டையன்

கொரோனா வைரஸால் கிட்டத்தட்ட 2 மாதங்களுக்கு மேலாக பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. இந்த ஊரடங்கால் அனைத்து தொழில்களும் முடங்கியிருக்கும் நிலையில், மக்களின் நலனுக்காக பல சலுகைகளை அரசு அறிவித்து வருகிறது. இதனிடையே தனியார் பள்ளிகள் வரும் கல்வியாண்டுக்கான கட்டணத்தை செலுத்துமாறு பெற்றோர்களை வற்புறுத்தி வருவதாக புகார் எழுந்துள்ளது. அதனால் கொரோனா காலத்தில் கட்டணத்தை வசூலிக்க வற்புறுத்தினால் கல்லூரி நிர்வாகம் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் எச்சரிக்கை விடுத்திருந்தார்.

கல்விக்கட்டணம் செலுத்த வேண்டும் என எஸ்.எம்.எஸ் அனுப்பிய பள்ளிகளில் விசாரணை- அமைச்சர் செங்கோட்டையன்

இந்நிலையில், கல்விக்கட்டணம் செலுத்த வேண்டும் என பெற்றோருக்கு தகவல் அனுப்பிய பள்ளிகள் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். கோவையில் ஒரு பள்ளியிலும் சென்னையில் 3 பள்ளிகளிலும் இது தொடர்பாக விசாரணை நடந்து வருவதாகவும், கொரோனா காலத்தில் கல்விக் கட்டணம் வசூலிக்க கூடாது என அரசின் உத்தரவை மீறும் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.