kaappan-mobile kaappan-large
  • September
    22
    Sunday

Main Area

Main

kaappan-mobile kaappan-large


ENPT அப்டேட்: காத்திருந்ததுக்குப் பலன் கிடைத்து... ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட் கொடுத்த தனுஷ்! 

ENPT
ENPT
Loading...

சென்னை: எனை நோக்கி பாயும் தோட்டா படத்தின் ட்ரைலர் வெளியாகியுள்ளது. நடிகர் தனுஷ் நடிப்பில் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் எனை நோக்கி பாயும் தோட்டா. ஒன்றாக என்டெர்டையின்ட்மென்ட், எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் இணைந்து தயாரித்துள்ள இந்த படத்தில் மேகா ஆகாஷ் நடித்துள்ளார். கடந்த 2016ம் ஆண்டு தொடங்கிய இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்த நிலையிலும் மூன்று ஆண்டுகளாக படம் இன்னும் வெளியாகவில்லை.

ஏற்கனவே, இப்படம் ஏப்ரல் மாதத்தில் வெளியாகும் என்று தகவல் வெளியானது. ஆனால், பல்வேறு பிரச்சினைகள் காரணமாகப் படம் வெளியாவதில் சிக்கல் நீடித்துக் கொண்டே இருக்கிறது. இதனால் கடுப்பான ரசிகர்கள் எப்போது தான் இந்த படத்தை ரிலீஸ் செய்வீர்கள்? என்று குரல் கொடுக்க ஆரம்பித்தனர்.' https://t.co/ajnb5yQULx With due respect and thanks to everybody involved with this film, the investors, people who have stood by the film and me, to those who have invested across my other films, to everybody who’s been of some form of support or the other to me#ENPTfromSept6th — Gauthamvasudevmenon (@menongautham) August 24, 2019

இந்த நிலையில் இந்த படத்தின் அப்டேட் இன்று 3.30க்கு வெளியாகும் என்று அறிவிக்கப்டுருந்தது. இதை கண்ட ரசிகர்கள் எப்போதும் போல் ஒன்றும் இருக்காது என்று நினைத்தனர். ஆனால் அதற்கு எதிர்மாறாக படத்தின் ட்ரைலரை படக்குழு வெளியிட்டுள்ளது. காதல், ஆக்ஷன் என்று விறுவிறுப்பாக விறுவிறுப்பாக உருவாகியுள்ள அந்த படம் அடுத்த மாதம் 6ம் தேதி வெளியாகவுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.அந்த ட்ரைலரில் மேகா ஆகாஷ் மீதுள்ள காதலில் தனுஷ், 'நடிகையின் மடியில் ரசிகன் நான் விழுந்தேன். விழுந்த நொடியில் வருடங்கள் அடங்க. கனவா? திரையா? நிஜமா? எதிலே நான் வாழ்ந்தேன். முகமா? அகமா? சுகமா? எதிலே நான் விழுந்தேன்...' என்று பேசிய வசனம் அவரது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுவருகிறது. மேலும் எதிர்பார்க்க நேரத்தில் படத்தின் ட்ரைலர் வெளியானது இந்த படத்தின் ரசிகர்கள் மத்தியில் குஷியை ஏற்படுத்தியுள்ளது.

2018 TopTamilNews. All rights reserved.