ஓபிஎஸ்க்கு இப்போதாவது ஞானோதயம் வந்ததே..கி.வீரமணி கலகல

 

ஓபிஎஸ்க்கு இப்போதாவது ஞானோதயம் வந்ததே..கி.வீரமணி கலகல

நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு நிரந்தர விலக்கு அளிக்க வேண்டும் என்று சட்டமன்றப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட சட்ட மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தி மக்கள் போராட்டங்களை நடத்த வேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி தலைமையில் நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.

ஓபிஎஸ்க்கு இப்போதாவது ஞானோதயம் வந்ததே..கி.வீரமணி கலகல

இந்த கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கி. வீரமணி, நீட் தேர்வில் ராஜன் குழுவின் அறிக்கையை தமிழ்நாடு அரசு வெளியிட்டதன் நோக்கமே.. இந்த நீட் தேர்வில் என்னென்ன சட்டவிரோதமாக வந்திருக்கிறது என்ற முழுவிபரங்களும் அதில் உள்ளடக்கி இருக்கிறது என்பதை தெரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காகத்தான் என்றார்.

நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்ற விவகாரம் அப்புறம் இருக்கட்டும். முதலில் நீட் தேர்வினால் உயிரிழந்த மாணவர்களுக்கு அனுதாபம் தெரிவித்தார்களா பிரதமரும், அண்ணாமலையும். அந்த மனிதாபிமானம் கூட அவர்களிடம் இல்லையே என்று தனது வருத்தத்தை தெரிவித்தார்.

அப்போது ஓ பன்னீர்செல்வம் குறித்த கேள்விக்கு, நதியின் ஓரம் கரையினில் நெருப்பு இடையில் இப்படி ஒரு சிரிப்பு.. அவ்வளவுதான். அதாவது அவர் நதியில கரையில ஓரத்துல இருக்கிறார். அப்போது சொல்லாத பல விசயங்களை இப்போது சொல்லிக்கொண்டிருக்கிறார். பரவாயில்ல..அப்போது வராத ஞானோதயம் இப்போது வந்ததே என்று மகிழ்ச்சியடைகிறோம். அதற்கு பாராட்டு என்று சொல்லிவிட்டு சிரித்தார்.

ஓபிஎஸ்க்கு இப்போதாவது ஞானோதயம் வந்ததே..கி.வீரமணி கலகல

மத்திய அரசின் வேளாண் திருத்த சட்டங்களுக்கு எதிராக தமிழ்நாடு சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட போது தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக வெளிநடப்பு செய்தது. அதிமுகவும் வெளிநடப்பு செய்தது.

அப்போது உச்ச நீதிமன்றத்தில் இருக்கும் வழக்கில் தீர்ப்பு வரும் வரைக்கும் வேளாண் சட்டங்களுக்கு மத்திய அரசிடம் இருந்து பதில் கிடைக்கும் வரை காத்திருக்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் துணைத் தலைவர் பன்னீர்செல்வம் தெரிவித்தார் இதன் பின்னர் பேரவைக்கு வந்த ஓ. பன்னீர் செல்வத்திடம் இந்த தீர்மானத்தின் மீதான விவாதத்தின்போது புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக கொண்டுவரப்பட்ட தீர்மானத்தை அதிமுக ஆதரிக்கிறதா இல்லையா என்று துரைமுருகன் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த ஓ. பன்னீர்செல்வம், உச்ச நீதிமன்றத்தில் வழக்கு இருப்பதால் தீர்ப்புக்கு பின்னர்தான் பதில் கூறமுடியும் என்றார்.

ஓபிஎஸ்க்கு இப்போதாவது ஞானோதயம் வந்ததே..கி.வீரமணி கலகல

தொடர்ந்து பேசிய அமைச்சர் துரைமுருகன், அதிமுக ஆட்சியில் எத்தனை முறை வேளாண் சட்டங்கள் குறித்து கடிதம் அனுப்பி இருக்கிறீர்கள் என்று துரைமுருகன் கேள்வி கேட்க, நதியில் வெள்ளம் கரையினில் நெருப்பு இரண்டுக்கும் நடுவே இறைவனின் சிரிப்பு இதுதான் என் தற்போதைய நிலைமை என்பதை அவையோர் அறிவார்கள் என்று நடிகர் சிவாஜியின் தேனும் பாலும் படத்தில் இடம்பெற்ற கண்ணதாசனின் பாடல் வரிகளை சுட்டிகாட்டி பேசியபோது அவையில் சிரிப்பலைகள் எழுந்தன.

அதுகுறித்து கேள்விக்கும் வீரமணி பதிலளித்தபோதும் சிரிப்பலைகள் எழுந்தன.