மோடிக்காக சமோசா, மாங்காய் சட்னி ரெடி செய்த ஆஸ்திரேலிய பிரதமர்

 

மோடிக்காக சமோசா, மாங்காய் சட்னி ரெடி செய்த ஆஸ்திரேலிய பிரதமர்

சிட்னி: இந்திய பிரதமர் மோடிக்காக ஆஸ்திரேலிய பிரதமர் சமோசா, மாங்காய் சட்னி ரெடி செய்த சுவாரஸ்ய சம்பவம் நிகழ்ந்துள்ளது.

இந்திய பிரதமர் மோடிக்காக ஆஸ்திரேலிய பிரதமர் சமோசா, மாங்காய் சட்னி ரெடி செய்த சுவாரஸ்ய சம்பவம் நிகழ்ந்துள்ளது. பிரதமர் மோடியுடன் பகிர்ந்து கொள்வதற்காக இந்த டிஷ்ஷை தானாகவே தயார் செய்ததாக ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

பிரதமர் மோடியும், ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசனும் வருகிற 4-ஆம் தேதி வீடியோ மூலம் சந்தித்து உரையாட உள்ளனர். இந்த நிலையில், சுவையான சமோசாஸ் மற்றும் மாம்பழ சட்னி தயாராகி வருவதாகவும் இவற்றை பிரதமர் மோடியுடன் பகிர்ந்து உண்ண முடியாததால் புகைப்படங்களை மட்டும் அவருடன் பகிர்ந்து கொள்வதாகவும் ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் தனது ட்விட்டர் பதிவில் கூறியுள்ளார்.