‘குக்கூ குக்கூ.. உதயநிதி டாடிக்கு’ : எஞ்சாயி என் சாமி பாடலின் அமமுக வெர்ஷன்!

 

‘குக்கூ குக்கூ.. உதயநிதி டாடிக்கு’ : எஞ்சாயி என் சாமி பாடலின் அமமுக வெர்ஷன்!

இணையத் தளங்களில் ட்ரெண்ட் ஆகிக் கொண்டிருக்கும் பாடல்களில் ஒன்று ‘எஞ்சாயி என் சாமி’. தெருக்குரல் அறிவு எழுதி பாடகி தீ குரலில் வெளியான இந்த பாடல் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. இன்ஸ்டாகிராம், வாட்ஸ் ஆப் உள்ளிட்ட எல்லா சமூக வலைதளங்களிலும் இந்த பாடல் தான் ஒலித்துக் கொண்டிருக்கிறது. வெளியான 2 வாரத்திலேயே 2 கோடிக்கும் அதிகமான வியூஸை பெற்றுள்ளது.

‘குக்கூ குக்கூ.. உதயநிதி டாடிக்கு’ : எஞ்சாயி என் சாமி பாடலின் அமமுக வெர்ஷன்!

நாடெங்கிலும் ஒலித்துக் கொண்டிருக்கும் இந்த பாடலை அமமுகவினர், தங்களது நடைக்கு ஏற்றாற்போல மாற்றி பிரச்சாரத்துக்கு பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். எல்லா கட்சி பற்றியும் அந்த பாடலில் கடுமையாக விமர்சிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசியல் தலைவர்கள் யாரையும் அதில் விட்டுவைக்கவில்லை. குறிப்பாக அதில் இடம்பெற்றிருக்கும் ஓட்டுக்கு பணம், மது வாசகங்கள் பேசு பொருளாகியுள்ளன.

வரும் 6ம் தேதி நடக்கவிருக்கும் தேர்தலை நோக்கி அனைத்து கட்சிகளும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டிருக்கின்றன. 4ம் தேதி வரை மட்டுமே பிரச்சாரம் செய்ய முடியும் என்பதால், அரசியல் கட்சிகள் புது புது வித்தைகளை கையிலெடுத்துள்ளன. அதில், அமமுகவின் இந்த பாடலும் ஒன்று. அமமுக பிரச்சார பாடல்களை கேட்ட நெட்டிசன்கள், டிடிவி தினகரன் இது போல பல வித்தைகளை வைத்திருக்கிறார் போல இருக்கிறதே என கமெண்ட் செய்துக் கொண்டிருக்கிறார்கள்.