இங்கிலாந்து உடனான டெஸ்ட்- பேட்டிங்கில் சொதப்பி பவுலிங்கில் அசத்திய இந்திய அணி

 

இங்கிலாந்து உடனான டெஸ்ட்- பேட்டிங்கில் சொதப்பி பவுலிங்கில் அசத்திய இந்திய அணி

இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது,இதில் மூன்று போட்டிகளின் முடிவில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியுடன் தொடர் சமனில் உள்ளது.இந்நிலையில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 4வது டெஸ்ட் போட்டி லண்டனில் உள்ள ஓவல் மைதானத்தில் இன்று தொடங்கியது.

இங்கிலாந்து உடனான டெஸ்ட்- பேட்டிங்கில் சொதப்பி பவுலிங்கில் அசத்திய இந்திய அணி

டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோ ரூட் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார்.முதலில் பேட்டிங்கை தொடங்கிய இந்திய அணிக்கு ஆரம்பம் முதலே விக்கெட்டுகள் சரிந்தன.ரோகித் சர்மா 11 ரன்னிலும்,கேஎல் ராகுல் 17 ரன்னிலும்,புஜாரா 4 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.இந்தத் தொடரில் சிறிது தடுமாறி வந்த கோலி இந்த போட்டியில் சிறப்பாக ஆடி 4 கவர் டிரைவ் பவுண்டரிகளை அடித்து அசத்தினார்.அற்புதமாக ஆடி அரைசதம் அடித்த கோலி , ராபின்சன் பந்துவீச்சில் விக்கெட் கீப்பர் பேர்ஸ்டோவிடம் கேட்ச் கொடுத்து 50 ரன்களில் வெளியேறினார்.இதன் பிறகு வந்த ஷர்டுல் தாகூர் டி20 கிரிக்கெட் போல் ஆடி 31 பந்துகளில் அரைசதம் அடித்தார்.அதிரடியாக ஆடி வந்த ஷர்டுல் தாகூர் 36 பந்துகளில் 57 ரன்கள் குவித்து எல்பிடபிள்யூ ஆகி வெளியேறினார்.61.3 ஓவர் முடிவில் இந்திய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 191 ரன்கள் மட்டுமே எடுத்தது. இங்கிலாந்து தரப்பில் கிறிஸ் ஓக்ஸ் 4 விக்கெட்டுகளையும்,ராபின்சன் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

இங்கிலாந்து உடனான டெஸ்ட்- பேட்டிங்கில் சொதப்பி பவுலிங்கில் அசத்திய இந்திய அணி

பின்னர் தனது இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணியின் துவக்க ஆட்டக்காரர்களை பும்ரா ஒரே ஓவரில் காலி செய்தார்.பின்னர் இங்கிலாந்து அணியின் நம்பிக்கை நட்சத்திரமான கேப்டன் ஜோ ரூட்டை 21 ரன்களில் வெளியேற்றினார் உமேஷ் யாதவ்.இன்றைய ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து அணி 17 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 53 ரன்கள் சேர்த்தது.டேவிட் மலன் 26 ரன்னுடனும்,ஓவர்டன் 1 ரன்னுடனும் களத்தில் உள்ளனர்.இங்கிலாந்து அணி இந்திய அணியை விட 138 ரன்கள் மட்டுமே பின்தங்கியுள்ளது.