இங்கிலாந்து உடனான 4வது டெஸ்ட்- 171 ரன்கள் முன்னிலையுடன் வலுவான நிலையில் இந்திய அணி

 

இங்கிலாந்து உடனான 4வது டெஸ்ட்- 171 ரன்கள் முன்னிலையுடன் வலுவான நிலையில் இந்திய அணி

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 4வது டெஸ்ட் போட்டி லண்டனில் உள்ள ஓவல் மைதானத்தில் கடந்த வியாழக்கிழமை தொடங்கியது.முதலில் ஆடிய இந்திய அணி 61.3 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 191 ரன்களை மட்டுமே எடுத்தது.இந்திய அணி தரப்பில் கோலி 50 ரன்களும்,தாகூர் 57 ரன்களும் எடுத்தனர்.இங்கிலாந்து தரப்பில் கிறிஸ் ஓக்ஸ் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

இங்கிலாந்து உடனான 4வது டெஸ்ட்- 171 ரன்கள் முன்னிலையுடன் வலுவான நிலையில் இந்திய அணி

பின்னர் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி 84 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 290 ரன்களை குவித்தது.இங்கிலாந்து தரப்பில் அதிகபட்சமாக ஓலி பாப் 81 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.இந்திய தரப்பில் உமேஷ் யாதவ் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.இதன் மூலம் இங்கிலாந்து அணி இந்திய அணியை விட 99 ரன்கள் முன்னிலை பெற்றது.இதன் பிறகு தனது இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி இன்றைய ஆட்டநேர முடிவில்
விக்கெட் இழப்பின்றி 43 ரன்கள் எடுத்திருந்தது.இன்று தொடர்ந்து ஆடிய இந்திய அணி சிறப்பான தொடக்கம் தந்தனர்.நன்றாக ஆடி வந்த கேஎல் ராகுலை 46 ரன்களில் ஆட்டமிழக்க செய்தார் ஆண்டர்சன்.இதன்பிறகு ஜோடி சேர்ந்த ரோகித் சர்மா மற்றும் புஜாரா வலுவான கூட்டணி அமைத்தனர்.

இங்கிலாந்து உடனான 4வது டெஸ்ட்- 171 ரன்கள் முன்னிலையுடன் வலுவான நிலையில் இந்திய அணி

இந்தத் தொடரில் சிறப்பாக ஆடிய ரோகித் சர்மா சதத்தை தவறவிட்டுக் கொண்டே வந்தார் ஆனால் இன்று பிரமாதமாக ஆடி 204வது பந்தில் சிக்சர் அடித்து சதம் அடித்தார்.ரோகித் சர்மா டெஸ்ட் போட்டியில் வெளிநாட்டில் அடிக்கும் முதல் சதம் என்பது குறிப்பிடத்தக்கது.
புஜாரா 103 பந்துகளில் அரைசதம் கடந்தார்.
இந்த ஜோடியை முடியாமல் இங்கிலாந்து பந்துவீச்சாளர்கள் விழிபிதுங்கி நின்றனர்.
ஒருவழியாக 80 ஓவர் ஆனவுடன் புதிய பந்தை எடுத்து ரோகித் மற்றும் புஜாராவை ஒரே ஓவரில் காலி செய்தார் ராபின்சன்.
ரோஹித் 127 ரன்னும் , புஜாரா 61 ரன்னும் எடுத்தனர்.92 ஓவர்களில் இந்திய அணி 3 விக்கெட் இழப்பிற்கு 270 ரன்கள் எடுத்திருந்தபோது போதிய வெளிச்சம் இன்மை காரணமாக ஆட்டம் முன்கூட்டிய முடிக்கப்பட்டது.