இங்கிலாந்து உடனான 4வது டெஸ்ட்- 2வது இன்னிங்சில் இந்திய அணி நிதான ஆட்டம்

 

இங்கிலாந்து உடனான 4வது டெஸ்ட்- 2வது இன்னிங்சில் இந்திய அணி நிதான ஆட்டம்

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 4வது டெஸ்ட் போட்டி லண்டனில் உள்ள ஓவல் மைதானத்தில் நேற்று தொடங்கியது.

இங்கிலாந்து உடனான 4வது டெஸ்ட்- 2வது இன்னிங்சில் இந்திய அணி நிதான ஆட்டம்

முதலில் ஆடிய இந்திய அணி 61.3 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 191 ரன்களை மட்டுமே எடுத்தது.இந்திய அணி தரப்பில் கோலி 50 ரன்களும்,தாகூர் 57 ரன்களும் எடுத்தனர்.இங்கிலாந்து தரப்பில் கிறிஸ் ஓக்ஸ் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

பின்னர் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி நேற்றைய ஆட்ட நேர முடிவில் 17 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 53 ரன்கள் எடுத்து இருந்தது. இன்று ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்தில் மலன் மற்றும் ஓவர்டனை ஆகியோரை உமேஷ் யாதவ் வெளியேற்றி அசத்தினார்.ஒரு கட்டத்தில் 62 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வந்த இங்கிலாந்து அணியை ஓலி பாப் மற்றும் ஜானி பேர்ஸ்டோ ஆகியோர் மீட்டனர்.சிறப்பாக ஆடிய பேர்ஸ்டோ 37 ரன்களில் சிராஜ் பந்தியில் எல்பிடபிள்யூ ஆகி வெளியேறினார்.பட்லருக்கு பதில் வாய்ப்பு பெற்ற ஓலி பாப் 92 பந்துகளில் அரைசதம் அடித்தார்.மொயின் அலி தன் பங்குக்கு 35 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
ஓலி பாப் 81 ரன்னில் தாக்கூர் பந்துவீச்சில் போல்டாகி வெளியேறினார்.இதன் பிறகு வந்த கிறிஸ் ஓக்ஸ் இந்தியா அணியை போட்டு புரட்டி எடுத்தார்.60 பந்துகளில் 50 ரன்கள் சேர்த்த கிறிஸ் ஓக்ஸ் ரன் அவுட் ஆகி வெளியேறினார்.84 ஓவரில் இங்கிலாந்து அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 290 ரன்களை குவித்தது. இதன் மூலம் இங்கிலாந்து அணி இந்திய அணியை விட 99 ரன்கள் முன்னிலை பெற்றது.இதன் பிறகு தனது இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி இன்றைய ஆட்டநேர முடிவில்
விக்கெட் இழப்பின்றி 43 ரன்கள் எடுத்துள்ளது கே.எல் ராகுல் 22 ரன்களுடனும் ரோகித் 20 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.இந்திய அணி இதுவரை இங்கிலாந்து அணியை விட 50 ரன்கள் பின்தங்கியுள்ளது.