ரூ.300 கோடிக்கு மேல் வருவாய் இழப்பு; 5வது டெஸ்ட் உறுதி?

 

ரூ.300 கோடிக்கு மேல் வருவாய் இழப்பு; 5வது டெஸ்ட் உறுதி?

இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையே 5 வது டெஸ்ட் போட்டி இன்று மான்செஸ்டர் நகரில் நடைபெறுவதாக இருந்தது. ஆனால் இந்திய அணியில் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரிக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனை தொடர்ந்து பவுலிங் மற்றும் பீல்டிங் பயிற்சியாளர்கள் உட்பட மேலும் 3 பேருக்கு கொரோனா உறுதியானது. அதனால் வீரர்களுக்கு கொரோனா அச்சுறுத்தல் அதிகம் இருப்பதால் கடைசி டெஸ்ட் போட்டியில் இருந்து விலகுவதாக இந்திய அணி அறிவித்தது. இதனையடுத்து ஆட்டம் ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Event image

இந்த விஷயம் தொடர்பாக இரு நாட்டு கிரிக்கெட் வாரியங்களுக்கும் இடையே கடும் விவாதம் நடைபெற்றது. ஆட்டத்தை சில நாட்கள் கழித்து நடத்தலாம் என இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் தெரிவித்தது. ஆனால் கடைசி டெஸ்ட் போட்டியை ஐபிஎல், டி20 உலகக்கோப்பை தொடர்கள் முடிந்த பின்னர் வேறு ஒருநாளில் நடத்திவிடலாம் என பிசிசிஐ தெரிவித்தது.

கடைசி டெஸ்ட் போட்டியை நடக்காததால் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்திற்கு பெரும் நஷ்டம் ஏற்பட உள்ளது. அதாவது தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமம் மற்றும் டிக்கெட்கள் விற்பனை என சுமார் ரூ.304 கோடி வரை வருமான இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாக கருதுகின்றனர். இங்கு அனைத்து டிக்கெட்களும் விற்றுத் தீர்ந்ததால், அதற்கான பணத்தினை திரும்ப ஒப்படைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

மீண்டும் நடைபெற்ற இந்த ஆலோசனையில், இங்கிலாந்தின் வருவாய் இழப்பை சரிகட்ட புதிய முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அதாவது டி20 உலகக்கோப்பை தொடர் முடிந்த பிறகு மீண்டும் இங்கிலாந்துக்கு ஒரு சுற்றுப்பயணம் மேற்கொண்டு மீதமுள்ள ஒரு டெஸ்ட் போட்டி மற்றும் ஒருநாள் போட்டி தொடரை நடத்த பிசிசிஐ திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.