டி20-யிலும் தொடரும் இங்கிலாந்தின் வெற்றி… திணறும் பாகிஸ்தான்

டி20-யிலும் தொடரும் இங்கிலாந்தின் வெற்றி… திணறும் பாகிஸ்தான்

இங்கிலாந்து அணிக்கு வெற்றி மேல் வெற்றி கிடைத்துக்கொண்டிருக்க, என்ன செய்வதென்று திணறி வருகிறது பாகிஸ்தான் கிரிக்கெட் அணி

இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்துவருகிறது பாகிஸ்தான் கிரிக்கெட் அணி. கொரோனா பரவி வரும் சூழலில், அதற்கான பரிசோதனைகள் ஒரு பக்கம், அயல்மண்ணில் ஆடும் ரிஸ்க் ஒரு பக்கம் என கடும் போராட்டத்தில் தள்ளாடுகிறது பாகிஸ்தான் அணி.

டி20-யிலும் தொடரும் இங்கிலாந்தின் வெற்றி… திணறும் பாகிஸ்தான்

மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதல் போட்டியில் இங்கிலாந்து அணி த்ரில் வெற்றி பெற்றது. அடுத்த போட்டியில் அதிகநேரம் மழையே ஆடியதால் டிராவில் முடிந்தது. மூன்றாம் ஆட்டமும் டிராவில் முடிய டெஸ்ட் தொடரை இங்கிலாந்து 1:0 எனும் கணக்கில் வென்றது.

அடுத்து, 3 போட்டிகள் கொண்ட டி20 மேட்ச் தொடங்கியது. முதல் போட்டியில், முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 16.1 ஓவர்களில் 131 ரன்கள் குவித்தது. ஆனால், மழை குறுக்கிடவே ஆட்டம் முடிவு எட்டப்படாமல் முடிவடைந்தது.

டி20-யிலும் தொடரும் இங்கிலாந்தின் வெற்றி… திணறும் பாகிஸ்தான்

இந்நிலையில் நேற்று நடைபெற்ற இரண்டாம் டி20 போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி, பீல்டிங் செய்ய முடிவெடுத்தது.

ஆனால், இதை நல்ல வாய்ப்பாகக் கருதிய பாகிஸ்தான் அணி 20 ஓவர்களில் 195 ரன்களைக் குவித்தது. அந்த அணியின் முகம்மது ஹஃப்ஸ் 36 பந்துகளில் 69 ரன்களை விளாசித்தள்ளார். இதன்மூலம் டி20 போட்டிகளில் 2000 ரன்களைக் கடந்திருக்கிறார்.

டி20-யிலும் தொடரும் இங்கிலாந்தின் வெற்றி… திணறும் பாகிஸ்தான்

பேட்டிங்கில் நல்ல ஃபார்மில் உள்ள பாபர் அசாம் 44 பந்துகளில் 56 ரன்கள் எடுத்தார். டி20 போட்டியில் இது நல்ல ஸ்கோர்தான்.

கடினமான இலக்கை எதிர்கொள்ள பேட்டிங்கைத் தொடங்கியது இங்கிலாந்து அணி. 5 விக்கெட்டுகளை இழந்து இன்னும் 5 பந்துகள் இருக்கும்போதுஏ 199 ரன்களைக் குவித்து வெற்றியை ருசித்தது இங்கிலாந்து அணி. அந்த அணியின் மோர்கன் 33 பந்துகளில் 66 ரன்களையும், டேவிட் மலன் 35 பந்துகளில் 54 ரன்களையும், ஜானி பேர்ஷ்டோ 24 பந்துகளில் 44 ரன்களையும் குவித்து அணியின் வெற்றிக்கு வித்திட்டார்கள்.

டி20-யிலும் தொடரும் இங்கிலாந்தின் வெற்றி… திணறும் பாகிஸ்தான்

டெஸ்ட் தொடரை இழந்தை பாகிஸ்தான், டி20 போட்டியில் வெல்லலாம் என்ற கனவில் இருந்தது.

டி20-யிலும் தொடரும் இங்கிலாந்தின் வெற்றி… திணறும் பாகிஸ்தான்

ஆனால், இப்போதைய நிலவரப்படி 1:0 எனும் கணக்கில் இங்கிலாந்து அணியே முன்னணியில் உள்ளது.