600 விக்கெட்கள் வீழ்த்திய ஆண்டர்சன்… தொடரை வென்ற இங்கிலாந்து

 

600 விக்கெட்கள் வீழ்த்திய ஆண்டர்சன்… தொடரை வென்ற இங்கிலாந்து

இங்கிலாந்து – பாகிஸ்தான் டெஸ்ட் தொடரை 1:0 எனும் கணக்கில் இங்கிலாந்து  அணி கைப்பற்றியுள்ளது.

மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் முதல் டெஸ்ட் போட்டியில் த்ரில் வெற்றி பெற்றது  இங்கிலாந்து அணி. 1: 0 எனும் முன்னிலை பெற்றது இங்கிலாந்து.

இரண்டாம் டெஸ்ட் போட்டியின் ஐந்து நாள்களில் இரு அணிகளும் ஒரு இன்னிங்ஸ்கூட முடிக்க முடியவில்லை. அந்தளவுக்கு மழை குறுக்கிட்டது. போட்டி டிராவில் முடிவடைய இங்கிலாந்து 1: 0 எனும் நிலையே தொடர்ந்தது.

600 விக்கெட்கள் வீழ்த்திய ஆண்டர்சன்… தொடரை வென்ற இங்கிலாந்து

இந்நிலையில் மூன்றாம் டெஸ்ட் போட்டி முடிவுக்கு வந்துவிட்டது. முதலில் பேட்டிங் பிடித்த இங்கிலாந்து சிறப்பாக ஆடியது. 8 விக்கெட் இழப்புக்கு 583 ரன்களைக் குவித்தது. ஜாக் கிராவ்லி 267 ரன்களும், விக்கெட் கீப்பரான ஜாஸ் பட்லர் 152 ரன்களையும் எடுத்தனர்.

அடுத்து பேட்டிங் ஆட வந்த பாகிஸ்தான் அணியில் அசார் அலி 141 ரன்களைக் குவித்தார். ஆனால், மற்றவர்களில் ஆறு பேர் ஒற்றை இலக்க ரன் எடுத்து ஆட்டமிழந்தனர்.

600 விக்கெட்கள் வீழ்த்திய ஆண்டர்சன்… தொடரை வென்ற இங்கிலாந்து

இதனால், அனைத்து விக்கெட்டுகளை இழந்து 273 மட்டுமே எடுத்தது. இதனால் ஃபாலோ ஆனைத் தவிர்க்க முடியவில்லை. எனவே, மீண்டும் பேட் செய்ய வேண்டியதாயிற்று பாகிஸ்தான்.

இன்னும் இருநாளில் 310 ரன்களையும் அதற்கு மேலும் ரன்கள் குவித்து, இங்கிலாந்து வீரர்களை ஆல் அவுட் செய்வது சாத்தியமே இல்லை என்று உணர்ந்த பாகிஸ்தான் அணி மிக நிதானமாக ஆடி, 4 விக்கெட் இழப்புக்கு 187 ரன்களை எடுக்க ஆட்ட நேரம் முடிந்தது.

600 விக்கெட்கள் வீழ்த்திய ஆண்டர்சன்… தொடரை வென்ற இங்கிலாந்து

இதனால், 3 வது டெஸ்ட் போட்டி ட்ராவில் முடிந்தது. முதல் போட்டியில் இங்கிலாந்து அணி வென்று 1: 0 என்ற கணக்கில் முன்னிலை இருந்ததால் இங்கிலாந்தே இந்தத் தொடரை வென்றது.

600 விக்கெட்கள் வீழ்த்திய ஆண்டர்சன்… தொடரை வென்ற இங்கிலாந்து

ஆண்டர்சன் 600

இங்கிலாந்து அணியின் பந்துவீச்சாளர் ஆண்டர்சன் மிகத் திறமையாக பந்து வீசி முதல் இன்னிங்க்ஸில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன் மூலம் 598 விக்கெட்டுகளை டெஸ்ட் போட்டிகளில் எடுத்துள்ளார்.

இன்னும் 2 விக்கெட்டுகளை மட்டும் வீழ்த்தினால், உலகளவில் 600 விக்கெட்டுகள் வீழ்த்திய நான்காவது வீரர் எனும் பெருமையும் சாதனையும் ஆண்டர்சனைச் சேரும்.

இந்த நிலையில் இரண்டாம் இன்னிங்க்ஸில் பந்து வீசிய ஆண்டர்சன், பாகிஸ்தானின் ஓப்பனிங் பேட்ஸ்மேன் அபித் அலியின் விக்கெட்டை வீழ்த்தினார். அதன்பின், அசார் அலியின் விக்கெட்டையும் வீழ்த்து உலகளவில் 600 விக்கெட் வீழ்த்திய வீரராக தன்னை பதிவு செய்துகொண்டார்.