இங்கிலாந்து மீண்டும் வெற்றி – தொடரையும் பறிகொடுத்தது ஆஸ்திரேலியா

இங்கிலாந்து மீண்டும் வெற்றி – தொடரையும் பறிகொடுத்தது ஆஸ்திரேலியா

இங்கிலாந்து கிரிக்கெட் அணிக்கு வெற்றி மேல் வெற்றி கிடைத்துக்கொண்டிருக்கும் காலம் போலிருக்கு இது.

இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி. மூன்று டி20 போட்டிகள் மற்றும் மூன்று டெஸ்ட் போட்டிகளை ஆட திட்டமிட்டிருக்கின்றன இரு அணிகளும்.

இங்கிலாந்து மீண்டும் வெற்றி – தொடரையும் பறிகொடுத்தது ஆஸ்திரேலியா

இரு அணிகளும் பலம் வாய்ந்தவை என்பதால் ரசிகர்கள் ஆர்வத்துடன் இப்போட்டித் தொடரைப் பார்த்து வருகின்றனர்.  முதல் டி20 போட்டியில் முதலில் ஆடிய இங்கிலாந்து அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 162 ரன்களை எடுத்தது.

அடுத்து ஆடிய ஆஸ்திரேலிய அணியால் 20 ஓவர்களில் 160 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.  இதன்மூலம்,  த்ரில் வெற்றியை ருசித்தது இங்கிலாந்து அணி. தற்போது அடுத்த போட்டியிலும் வென்று அசத்தியிருக்கிறது.

இங்கிலாந்து மீண்டும் வெற்றி – தொடரையும் பறிகொடுத்தது ஆஸ்திரேலியா

நேற்று நடந்த இரண்டாவது டி20 போட்டியிலும் டாஸ் வென்றது ஆஸ்திரேலிய அணியே. ஆனால், சென்ற முறை போல் இல்லாது முதலில் பேட்டிங் எனத் தீர்மானித்தது.

ஆரோன் பின்ச் 33 பந்துகளில் 40 ரன்களும், மார்கஸ் ஸ்டோனிஸ் 26 பந்துகளில் 35 ரன்களும் மேக்ஸ்வெல் 18 பந்துகளில் 26 ரன்களையும் எடுத்தனர். மற்ற வீரர்களின் ஆட்டம் சொல்லும்படியாக இல்லை. இதனால், 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 157 ரன்களை மட்டுமே எடுத்தது ஆஸ்திரேலிய அணி.

இங்கிலாந்து மீண்டும் வெற்றி – தொடரையும் பறிகொடுத்தது ஆஸ்திரேலியா

158 என்ற எளிமையான எடுத்துவிடக்கூடிய ஸ்கோரை நோக்கி ஆட்டத்தைத் தொடங்கியது இங்கிலாந்து அணி. அதிரடியாக விளையாடிய ஜோச் பட்லர் 54 பந்துகளில் 74 ரன்களைக் குவித்தார். அதேபோல டேவிட் மலன் 32 பந்துகளில் 42 ரன்களை எடுத்தார். மிச்சம் 7 பந்துகள் இருக்கும் நிலையில் 158 ரன்களை எடுத்து போட்டியையும் டி20 போட்டித் தொடரையும் வென்றது இங்கிலாந்து அணி.  அதிரடியாக ஆடிய ஜோஸ் பட்லர் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டர்.

இங்கிலாந்து மீண்டும் வெற்றி – தொடரையும் பறிகொடுத்தது ஆஸ்திரேலியா

3 போட்டிகள் கொண்ட தொடரில் தொடர்ந்து இரண்டு டி20 போட்டிகளில்  2:0 என்ற கணக்கில் தொடரையும் வென்றுள்ளது இங்கிலாந்து அணி. ஆஸ்திரேலியாவுக்கு மூன்றாம் போட்டியில் ஆறுதல் வெற்றியாவது கிடைக்குமா என்று பார்ப்போம்.