தோல்வியா… ட்ராவா? முடிவு பாகிஸ்தான் கையில் – Eng Vs Pak டெஸ்ட் நிலவரம்

 

தோல்வியா… ட்ராவா? முடிவு பாகிஸ்தான் கையில் – Eng Vs Pak டெஸ்ட் நிலவரம்

இங்கிலாந்து – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான மூன்றாம் டெஸ்ட் போட்டியில் தோல்வியைத் தவிர்க்க பாகிஸ்தான் கடும் போராட்டத்தை மேற்கொள்கிறது.

மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் முதல் டெஸ்ட் போட்டியில் த்ரில் வெற்றி பெற்றது இங்கிலாந்து அணி. 1: 0 எனும் முன்னிலை பெற்றது இங்கிலாந்து.

இரண்டாம் டெஸ்ட் போட்டியின் ஐந்து நாள்களில் இரு அணிகளும் ஒரு இன்னிங்ஸ்கூட முடிக்க முடியவில்லை. அந்தளவுக்கு மழை குறுக்கிட்டது. போட்டி டிராவில் முடிவடைய இங்கிலாந்து 1: 0 எனும் நிலையே தொடர்ந்தது.

தோல்வியா… ட்ராவா? முடிவு பாகிஸ்தான் கையில் – Eng Vs Pak டெஸ்ட் நிலவரம்



இந்நிலையில் மூன்றாம் டெஸ்ட் போட்டி தற்போது நடைபெற்றுவருகிறது. முதலில் பேட்டிங் பிடித்த இங்கிலாந்து சிறப்பாக ஆடியது. 8 விக்கெட் இழப்புக்கு 583 ரன்களைக் குவித்தது. ஜாக் கிராவ்லி 267 ரன்களும், விக்கெட் கீப்பரான ஜாஸ் பட்லர் 152 ரன்களையும் எடுத்தனர்.

அடுத்து பேட்டிங் செய்த பாகிஸ்தானி அணியில் கேப்டன் அஸார் அலியைத் தவிர வேறு எவருமே ஒழுங்கான ஆட்டத்தை வெளிப்படுத்தவே இல்லை.

தோல்வியா… ட்ராவா? முடிவு பாகிஸ்தான் கையில் – Eng Vs Pak டெஸ்ட் நிலவரம்



அசார் அலி 273 பந்துகளில் 141 ரன்களைக் குவித்தார். ஆனால், மற்றவர்களில் ஆறு பேர் ஒற்றை இலக்க ரன் எடுத்து ஆட்டமிழந்தனர். இதனால், அனைத்து விக்கெட்டுகளை இழந்து 273 மட்டுமே எடுத்தது.

இதனால், பாலோ ஆன் முறையில் மீண்டும் பேட்டிங் பிடிக்கும் சூழலுக்கு தள்ளப்பட்டது பாகிஸ்தான் அணி. பாகிஸ்தான் அணி தோல்வியைத் தவிர்க்க வேண்டும் எனில், 310 ரன்களைக் குவித்து, அதன்பின் வெற்றிக்கான ரன்களையும் எடுக்க வேண்டும்.

தோல்வியா… ட்ராவா? முடிவு பாகிஸ்தான் கையில் – Eng Vs Pak டெஸ்ட் நிலவரம்

இந்த நிலையோடு நான்காம் நாள் ஆட்டத்தைத் தொடங்கியது பாகிஸ்தான் அணி. வெகு நிதானமான ஆட்டப்போக்கையே மேற்கொண்டது. நாள் முடிவில் இரண்டு விக்கெட்டுகளை இழந்து 100 ரன்களை மட்டுமே எடுத்துள்ளது. ஷான் மசூத் 18 ரன்களும் அபித் அலி 42 ரன்களோடும் ஆட்டம் இழந்தனர். கேப்டன் அசார் அலி 29 ரன்கள், பாபர் அசாம் 4 ரன்களோடும் களத்தில் நிற்கின்றனர்.

இன்னும் 210 ரன்களையும் அதற்கு மேல் வெற்றிக்கான ரன்களையும் எடுக்க வேண்டும். அடுத்து இங்கிலாந்து அணியின் அனைத்து விக்கெட்டுகளையும் வீழ்த்த வேண்டும். இதற்கெல்லாம் இருக்கும் கால அவகாசம் ஒரே நாள்தான். எனவே பாகிஸ்தான் வெற்றியடைய வாய்ப்பே இல்லை.

பாகிஸ்தான் நான்காம் நாள் ஆட்டத்தைப் போலவே வெகு நிதானமாக ஆடி, விக்கெட்களைக் காப்பாற்றிக்கொண்டு போட்டியை ட்ராவில் முடிக்க வேண்டும். தவறினால், எளிதாக இங்கிலாந்து வென்று விடும். ஆக, முடிவு பாகிஸ்தான் பேட்ஸ்மேன் கைகளில்தான்.

தோல்வியா… ட்ராவா? முடிவு பாகிஸ்தான் கையில் – Eng Vs Pak டெஸ்ட் நிலவரம்

இங்கிலாந்து அணியின் பந்துவீச்சாளர் ஆண்டர்சன் மிகத் திறமையாக பந்து வீசி முதல் இன்னிங்க்ஸில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன் மூலம் 598 விக்கெட்டுகளை டெஸ்ட் போட்டிகளில் எடுத்துள்ளார்.

இன்னும் 2 விக்கெட்டுகளை மட்டும் வீழ்த்தினால், உலகளவில் 600 விக்கெட்டுகள் வீழ்த்திய நான்காவது வீரர் எனும் பெருமையும் சாதனையும் ஆண்டர்சனைச் சேரும்.

தோல்வியா… ட்ராவா? முடிவு பாகிஸ்தான் கையில் – Eng Vs Pak டெஸ்ட் நிலவரம்



இந்த நிலையில் இரண்டாம் இன்னிங்க்ஸில் பந்து வீசிய ஆண்டர்சன், பாகிஸ்தானின் ஓப்பனிங் பேட்ஸ்மேன் அபித் அலியின் விக்கெட்டை வீழ்த்தினார். இதன் மூலம் அவரின் விக்கெட் கணக்கு 599 ஆக அதிகரித்துள்ளது.

இன்னும் ஒரு விக்கெட் கிடைத்தாலும் போதும் அவர் 600 –யைத் தொட. அநேகமாக அதை போட்டியின் இறுதிநாளான நாளை எட்டுவார் என்றே தெரிகிறது.