நரேந்திர மோடி மைதானத்தில் 3ஆவது டெஸ்ட்: டாஸ் வென்ற இங்கி… 4 முக்கிய மாற்றங்கள்!

 

நரேந்திர மோடி மைதானத்தில் 3ஆவது டெஸ்ட்: டாஸ் வென்ற இங்கி… 4 முக்கிய மாற்றங்கள்!

இந்தியாவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் இங்கிலாந்து முதலில் இரு டெஸ்ட் போட்டிகளை சென்னையில் ஆடியது. தற்போது மீதமிருக்கும் இரு டெஸ்ட் போட்டிகள் அகமதாபாத்திலுள்ள மோடி மைதானத்தில் நடைபெறுகிறது. பகலிரவு ஆட்டமாக நடைபெறவிருக்கும் இந்த டெஸ்ட் போட்டியில் பிங்க் நிறப் பந்து பயன்படுத்தப்படுகிறது. உலகின் மிகப்பெரிய மைதானமாக உருவாகியிருக்கும் மோடி மைதானத்தில் நடைபெறும் முதல் சர்வதேச போட்டி இது. இதனால் ஃபிட்ச் எப்படி இருக்கும் என்பது தெரியாததால், ஆட்டத்தின் போக்கு எப்படிச் செல்லும் என்பதைக் கணிக்கமுடியவில்லை.

Image

இச்சூழலில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் ஜோ ரூட் பேட்டிங்கை தேர்வு செய்திருக்கிறார். அதேபோல அணியின் சில மாற்றங்களையும் கொண்டுவந்திருக்கிறார். ஆண்டர்சன், ஆர்ச்சர், பெர்ஸ்டோ, கிராலி ஆகியோர் உள்ளே வந்திருக்கிறார்கள். பர்ன்ஸ், லாரன்ஸ், ஸ்டோன், மொயின் அலி ஆகியோர் உட்கார வைக்கப்பட்டிருக்கிறார்கள்.

மற்றவர்கள் அனைவரும் முந்தைய போட்டியில் விளையாடிய அதே வீரர்கள் தான். அதேபோல இந்திய அணியில் பந்துவீச்சாளர்கள் இருவர் மட்டும் மாற்றப்பட்டிருக்கின்றனர். சிராஜ் வெளியேற்றப்பட்டு பும்ராவும், குல்தீப் யாதவ்வுக்குப் பதிலாக வாசிங்டன் சுந்தரும் உள்ளே வந்திருக்கிறார்கள்.