இந்தியாவின் மேஜிக் சென்னையில் பலிக்கவில்லை… இங்கிலாந்து வலையில் வீழ்ந்தது!

இந்தியாவின் மேஜிக் சென்னையில் பலிக்கவில்லை… இங்கிலாந்து வலையில் வீழ்ந்தது!

இந்தியாவிற்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி முதல் டெஸ்டில் விளையாடிவருகிறது. டாஸ் வென்று பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி கேப்டன் ரூட்டின் இரட்டைச் சதம், சிப்லே, ஸ்டோக்ஸ் ஆகியோரின் அரை சதம் ஆகியவற்றால் 578 ரன்கள் என்ற இமாலய ஸ்கோரை அடித்தது. மிகவும் கடினமான ஸ்கோரை எதிர்கொண்ட இந்திய அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் பெரிதளவில் சோபிக்கவில்லை. மிடில் ஆர்டரில் புஜாராவும், பண்ட்டும் ஓரளவு அணியைச் சரிவிலிருந்து மீட்டனர்.

இந்தியாவின் மேஜிக் சென்னையில் பலிக்கவில்லை… இங்கிலாந்து வலையில் வீழ்ந்தது!

அதன்பின் வாசிங்டன் சுந்தரைத் தவிர்த்து எவருமே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. அவருக்கு யாருமே கம்பேனி கொடுக்காவிட்டாலும் தனி ஒருவனாக 85 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். முடிவில், இந்தியா 337 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. 241 ரன்கள் முன்னிலையிலிருந்த இங்கிலாந்து அணி பாலோஆன் கொடுக்கும் என்று எதிர்பார்த்த நிலையில், இரண்டாம் இன்னிங்ஸில் களமிறங்கியது. நான்காம் நாளிலிருந்து ஆடுகளம் பவுலிங்குக்கு சாதகமாகிவிடும்; விரைந்து 150 ரன்களுக்கு மேல் அடித்துவிட்டால் இந்தியாவை எளிதில் வீழ்த்திவிடலாம் என்பதே அவர்களது பிளான்.

இந்தியாவின் மேஜிக் சென்னையில் பலிக்கவில்லை… இங்கிலாந்து வலையில் வீழ்ந்தது!

பிளானின்படியே அனைவரும் அதிரடி ஆட்டத்தை மேற்கொண்டனர். அதே வேகத்தில் விக்கெட்டுகளையும் பறிகொடுத்தனர். இறுதியில் 178 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் இந்திய அணிக்கு 420 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. ஆஸ்திரேலியாவிள் விளையாடியது போல இப்போட்டியைச் சிறப்பாக விளையாடி இந்தியா டிரா செய்துவிடும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் அடுத்தடுத்து விழுந்த விக்கெட்டுகள் அதனைப் பொய்த்துப் போகச் செய்தது.

இந்தியாவின் மேஜிக் சென்னையில் பலிக்கவில்லை… இங்கிலாந்து வலையில் வீழ்ந்தது!

தொடக்க வீரர் ரோஹித் சர்மா இரு இன்னிங்ஸிலும் சேர்த்து 18 ரன்கள் அடித்தாலும், போட்டியில் அவரின் பங்களிப்பு பூஜ்யமாகவே இருக்கிறது. நிலைத்து நிற்கும் சுவர் புஜாராவும் வந்த வேகத்தில் நடையைக் கட்டினார. இளம் வீரர் சுப்மன் கில் அரைசதம் எடுத்து ஆறுதல் அளித்தாலும் அவரும் விக்கெட்டைப் பறிகொடுத்தார். இவர் சென்ற உடனே துணை கேப்டன் ரஹானே டக் அவுட்டானார். முதல் இன்னிங்ஸில் சிறப்பாக விளையாடிய சுந்தரும் பண்டும் அடுத்தடுத்து அவுட்டாகி ஏமாற்றம் அளித்தனர்.

இந்தியாவின் மேஜிக் சென்னையில் பலிக்கவில்லை… இங்கிலாந்து வலையில் வீழ்ந்தது!

ஆட்டத்தை எப்படியாவது டிராவாக்கி விட வேண்டும் என்ற முனைப்பில் தனிஒருவனாக கேப்டன் கோலி போராடிக் கொண்டிருந்தார். ஆனால், அவரின் போராட்டத்திற்கு யாரும் ஒத்துழைக்காமல் போனதே பரிதாபத்தின் உச்சம். ஒருகட்டத்திற்கு மேல் ஸ்டோக்ஸ் பந்தில் அவரும் 72 ரன்களில் வீழ்ந்தார். இந்தியாவும் வீழ்ந்தது. இறுதியில், 192 ரன்களுக்கு ஆல்அவுட்டாகி தோல்வியைத் தழுவியது.

இந்தியாவின் மேஜிக் சென்னையில் பலிக்கவில்லை… இங்கிலாந்து வலையில் வீழ்ந்தது!

227 ரன்கள் வித்தியாசத்தில் மிக மோசமான தோல்வியைக் கண்டது. ஆஸ்திரேலியாவில் நிகழ்ந்த எந்த மேஜிக்கும் சென்னையில் நிகழாமல் போனதே தோல்விக்குக் காரணம். இருப்பினும், பேட்டிங், பவுலிங், பீல்டிங் என அனைத்து டிபார்ட்மெண்டிலும் மிகச் சிறப்பான ஆட்டத்தை இங்கிலாந்து வெளிப்படுத்தியதே பிரதான காரணம்.