தோனியின் சாதனையை முறியடித்த இங்கிலாந்து கேப்டன்

 

தோனியின் சாதனையை முறியடித்த இங்கிலாந்து கேப்டன்

கிரிக்கெட்டில் சில வீரர்களின் பெயர்கள் மட்டுமே கிரிக்கெட் விளையாட்டுப் பற்றி தெரியாதவர்களுக்குக்கூட தெரியும். அப்படியானவர்களின் வரிசையில் கெத்தாக இடம்பிடித்தவர் மஹிந்திர சிங் தோனி. ஐ.பி.எல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் செல்ல கேப்டனும்கூட.

கபில்தேவ் தலைமையேற்று உலககோப்பை வாங்கித் தந்தார். அதற்கு பிறகு எத்தனையோ கேப்டன்கள் வந்தாலும் உலககோப்பையை இந்திய அணியால் வெல்ல முடியவில்லை. அந்தக் குறையைப் போக்கியது தோனி தான்.

தோனியின் சாதனையை முறியடித்த இங்கிலாந்து கேப்டன்

அணியைச் சிறப்பாக வழிநடத்தும் பெஸ்ட் கேப்டன் தோனி என்பது எல்லோருக்கும் தெரியும். உலகின் தலைசிறந்த விக்கெட் கீப்பர்களின் பட்டியலில் நிச்சயம் தோனியின் பெயர் முதல் மூன்று இடங்களில் இருக்கும்.

தோனி தனிப்பட்ட முறையிலும் பல சாதனைகளைச் செய்திருக்கிறார். அவரின் சாதனை ஒன்று முறியடிக்கப்பட்டிருக்கிறது.

தோனியின் சாதனையை முறியடித்த இங்கிலாந்து கேப்டன்

சர்வதேசப் போட்டிகளில் கேப்டனாக அதிக சிக்ஸர் அடித்தவர் எனும் சாதனைக்கு உரியவராக இருந்தார். இதன்மூலம் 322 ஆட்டங்களில் 211 சிக்ஸர்கள் அடித்து விளாசியிருக்கிறார். தோனியின் அதிரடி ஆட்டம் தொடங்கிவிட்டால் சிக்ஸர்களாக வந்து குவியும். இந்தச் சாதனைதான் முறியடிக்கப்பட்டிருக்கிறது.

தற்போது இங்கிலாந்துக்கும் அயர்லாந்துக்கும் இடையே நடந்த ஒருபோட்டியில், இங்கிலாந்து அணி கேப்டன் இயான் மார்கன் இந்தச் சாதனையை முறியடித்திருக்கிறார். இந்தப் போட்டியில் மோர்க்கல் 106 ரன்கள் குவித்தார். அதில் 4 சிக்ஸர்களும் அடங்கும். இதன்மூலம் 163 ஆட்டங்களில் 215 சிக்ஸர்கள் அடித்து விளாசியிருக்கிறார் மார்கன்