தலைவிரித்தாடும் வேலையில்லா திண்டாட்டம்: பிணவறை உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்கும் என்ஜினியர்கள்!

 

தலைவிரித்தாடும் வேலையில்லா திண்டாட்டம்: பிணவறை உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்கும் என்ஜினியர்கள்!

நாடெங்கிலும் வேலையில்லா திண்டாட்டம் தலைவிரித்து ஆடுகிறது. குறிப்பாக கொரோனா வைரஸ் பாதிப்புக்கு பிறகு பலர் தங்களது வேலையை இழந்து உணவுக்கே திண்டாடும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், மக்கள் கிடைத்த வேலைக்கு செல்லலாம் என்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இந்த நிலையில், மேற்கு வங்கத்தில் பிணவறை உதவியாளர் பணிக்கு ஆயிரக் கணக்கான என்ஜினியர்கள் விண்ணப்பித்தது சுகாதாரத்துறையினரை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

தலைவிரித்தாடும் வேலையில்லா திண்டாட்டம்: பிணவறை உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்கும் என்ஜினியர்கள்!

கொல்கத்தாவில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிணவறை தடயவியல் பரிசோதனைக்கு 6 உதவியாளர்கள் பணி காலியாக உள்ளது. அந்தப் பணிக்கு 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிப்பு வெளியானது. அந்தப் பணிக்கு மொத்தமாக சுமார் 8 ஆயிரம் பேர் விண்ணப்பித்திருந்த நிலையில் அதில் பட்டதாரிகள், முதுநிலை பட்டதாரிகள், என்ஜினியர்கள் மட்டுமே 2 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர். எனினும் 784 பேருக்கு மட்டுமே தேர்வு எழுதுவதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளது.

வழக்கமாக ஏற்கனவே பணியில் இருந்தவர்களின் பிள்ளைகளே இந்த பணிக்கு விண்ணப்பார்கள் என்று தெரிவித்த அதிகாரிகள், முதன் முறையாக ஆயிரக் கணக்கில் பட்டதாரிகள் விண்ணப்பித்துள்ளனர் என்றும் பிணவறை உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்கும் அளவுக்கு வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்துள்ளது என்றும் தெரிவித்துள்ளனர்.